Deva Enaimarakkade - தேவா எனைமறக்காதே - Christking - Lyrics

    Deva Enaimarakkade - தேவா எனைமறக்காதே

    தேவா எனைமறக்காதே - இந்தச்
    சிறியன் படுந்துயரில் தூரநிற்காதே

    நேயா உனையன்றி நீசனுக்கார் கதி
    தூயா கிருபைகூர் நான் மகாதோஷி

    வானுலகோர்தொழும் நாதர் -இந்த
    மானிடர்கரையேற வந்தசகாயா
    காலைமாலைகள் தோறும் கரைந்து உருகுகின்ற
    கர்மசண்டாளனைக் கண்ணோக்க லாகாதா

    பாவியின் மேலிரங்கையா - பொல்லாப்
    பாதகனைக்கைவிடாதே நலமெய்யா
    தாரணிதன்னில் தவிக்குமிவ்வேழையைத்
    தாங்கியா தரித்துந்தன் தயைபுரி ஐயா

    என்மீறுதல் நினையாதே எந்தன்
    இளமையின் பாவத்தை மனதில்வையாதே
    உன்பாதஞ் சேர்ந்தன் உவந் தேனுனையடைந்தேன்
    நின்பாதந்தானே நிலையாகக்கண்டேன்

    நெருக்கப்படுகிறேன் தேவா - என்னை
    உருக்கமாய்ப் பாராய் கிறிஸ்தேசுநாதா
    இரக்கம் வைத்தென்றனின் குறைதன்னை நீக்கு
    என்னை ஆட்கொண்டவா இயேசு சர்வேசா

    சரணம் சரணம் சருவேசா - இந்தத்
    தருணம் தருணம் உன்றன் கருணை கூர் நேசா
    மரணவேளையிலும் நடுத்தீர்வை தினத்திலும்
    மாபாதகன் எனை ரட்சியாய் நாதா
    Deva Enaimarakkade - தேவா எனைமறக்காதே Deva Enaimarakkade - தேவா எனைமறக்காதே Reviewed by Christking on May 03, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.