Deva Ivveetil Indre - தேவா இவ்வீட்டில் இன்றே - Christking - Lyrics

    Deva Ivveetil Indre - தேவா இவ்வீட்டில் இன்றே

    தேவா இவ்வீட்டில் இன்றே மேவி எழுந்து வரவே - தயை
    செய்வாய் எமது கோவா

    மூவர் ஒருவரான தேவா கிறிஸ்துநாதா -எங்கள்
    முன்னவா சத்ய வேதா
    பூவில் எமக்குதவி யாருமில்லை எம் தாதா - யேசு
    புண்ணியனே மா நீதா -இங்கு
    நண்ணுவாய் மெய்ப் போதா - தயை
    பண்ணுவாய் வினோதா
    மேவி உனதருளை ஈவாய் இவ்வீட்டின் மீது
    ஜீவனே யேசு கோனே - ஏழைப்
    பாவிகள் மீட்பன் தானே

    விந்தையுடன் களிப்பும் சந்தமுடன் உண்டாக - அதி
    மேன்மையுடன் சிநேகம்
    அந்தமுடன் பெருகி எந்தப் பாவமும் ஏக - என்றும்
    அத்தனோ டுற வாக - ஜெப
    துந்துமிகள் முழங்க - ஐக்யம்
    பந்தமுடன் இலங்க,
    தந்தைப் பரனே இன்று உன்றன் அருள் நிறைவாய்ச்
    சொந்தமுடன் ஈவாயே - இவர்
    சந்ததம் வாழ நீயே

    இங்கு வசிக்கும் மட்டும் துங்கன் மொழிக் கிசைந்தே -பரன்
    இஷ்டப்படி நடந்தே
    அங்கம் மனது யாவும் பங்கம் இன்றித் தொடர்ந்தே -இவர்
    அனுதினமும் மகிழ்ந்தே -உயர்
    அம்பர வீட்டில் சேர்ந்து -மிகு
    கெம்பீரமாக வாழ்ந்து
    புங்கமுடன் நிதமும் தங்கி யேசு பரனில்
    இங்கிதமாய்க் கொண்டாட -நிதம்
    மங்களக் கவி பாட
    Deva Ivveetil Indre - தேவா இவ்வீட்டில் இன்றே Deva Ivveetil Indre - தேவா இவ்வீட்டில் இன்றே Reviewed by Christking on May 03, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.