Enge Sumanthu Pogireer - எங்கே சுமந்து போகிறீர் - Christking - Lyrics

Enge Sumanthu Pogireer - எங்கே சுமந்து போகிறீர்

எங்கே சுமந்து போகிறீர் சிலுவையை நீர்
எங்கே சுமந்து போகிறீர்

எங்கே சுமந்து போறீர் இந்தக் கானலில் உமது
அங்கம் முழுதும் நோக ஐயா என் ஏசுநாதா

தோளில் பாரம் அழுந்த தூர்க்கப் பெலம் இல்லாமல்
தாளுந் தத்தளிக்கவே தாப சோபம் உற நீர்

வாதையினால் உடலும் வாடித் தவிப்புண்டாக
பேதம் இல்லாச்சீமோனும் பின்னாகத் தாங்கிவர

தாயார் அழுதுவர சார்ந்தவர் பின் தொடர
மாயம் இல்லாத ஞான மாதர் புலம்பி வர

வல்ல பேயைக் கொல்லவும் மரணந்தனை வெல்லவும்
எல்லை இல்லாப் பாவங்கள் எல்லாம் நாசமாகவும்

மாசணுகாத சத்திய வாசகனே உமது
தாசர்களைக் காக்கவும் தாங்காச் சுமையை எடுத்து
Enge Sumanthu Pogireer - எங்கே சுமந்து போகிறீர் Enge Sumanthu Pogireer - எங்கே சுமந்து போகிறீர் Reviewed by Christking on May 05, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.