En Thayin Karuvilae - என் தாயின் கருவிலே - Christking - Lyrics

    En Thayin Karuvilae - என் தாயின் கருவிலே

    என் தாயின் கருவிலே நான் உருவான
    நாள் முதல் நாள்தோறும் காத்து வந்தீரே
    என் நாசியாலே நான் சுவாசித்த நாள் முதல்
    நாள்தோறும் காத்து வந்தீர்

    நன்றி நன்றி பலி செலுத்தியே
    நாதன் இயேசுவை பாடுவேன்
    கோடி நன்றி பலி செலுத்தியே
    ஜீவன் தந்தவரைப் பாடுவேன்

    பாவியாக நான் வாழ்ந்து பாவம் செய்த
    நாட்களிலும் நாள்தோறும் காத்து வந்தீரே
    நான் உம்மைவிட்டு தூரம் சென்று
    நாள்தோறும் காத்து வந்தீரே

    நான் திக்கற்று துணையின்றி திகைத்திட்ட
    நேரத்தில் துணையாய் தேடிவந்தீரே
    நான் துக்கத்தால் மனம் நொந்து
    மடிகின்ற நேரத்தில் உம் மகன்
    என்னை தேடி வந்தீரே

    நான் மனதார நேசித்த மனிதர்கள்
    மறந்தாலும் மறவாத நேசர் நீர் ஐயா
    என் சூழ்நிலைகள் மாறிட்டாலும்
    மாறிடா உம் கிருபையாலே
    நாள்தோறும் தாங்கினீரையா
    En Thayin Karuvilae - என் தாயின் கருவிலே En Thayin Karuvilae - என் தாயின் கருவிலே Reviewed by Christking on May 05, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.