Ennalume Thuthipai - எந்நாளு மேதுதிப்பாய் - Christking - Lyrics

    Ennalume Thuthipai - எந்நாளு மேதுதிப்பாய்

    எந்நாளு மேதுதிப்பாய் - என்னாத்துமாவே, நீ
    எந்நாளு மேதுதிப்பாய்!
    இந்நாள் வரையிலே உன்னதனார் செய்த
    எண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது.

    பாவங்கள் எத்தனையோ, - நினையா திருந்தாருன்
    பாவங்கள் எத்தனையோ?
    பாழான நோயை அகற்றி குணமாக்கிப்
    பாரினில் வைத்த மகா தய வைஎண்ணி

    எத்தனையோ கிருபை, - உன்னுயிர்க்குச் செய்தாரே
    எத்தனையோ கிருபை
    நித்தமுனைமுடி சூட்டினதுமன்றி,
    நேயமதாக ஜீவனை மீட்டதால்.

    நன்மையாலுன் வாயை-நிறைத்தாரே, பூர்த்தியாய்
    நன்மையாலுன் வாயை;
    உன்வயது கழுகைப்போல் பலங்கொண்டு,
    ஓங்கு இளமைபோலாகவே செய்ததால்.

    பூமிக்கும் வானத்துக்கும் உள்ள தூரம் போலவே,
    பூமிக்கும் வானத்துக்கும்;
    சாமி பயமுள்ளவர் மேல் அவர் அருள்
    சாலவும் தங்குமே, சத்திய மேயிது.

    மன்னிப்பு மாட்சிமையாம்- மாதேவனருளும்
    மன்னிப்பு மாட்சிமையாம்;
    எண்ணூவாயோ கிழக்கு மேற்கின் தூரமே?
    எண்ணில் உன்பாவம் அகன்றதத்தூரமே.

    தந்தைதன் பிள்ளைகட்கு - தயவோ டிரங்கானோ
    தந்தைதன் பிள்ளைகட்கு
    எந்த வேளையும்அவ ரோடு தங்கினால்,
    ஏற்றிப் பாராட்டியே தூக்கிச் சுமப்பாரே.
    Ennalume Thuthipai - எந்நாளு மேதுதிப்பாய் Ennalume Thuthipai - எந்நாளு மேதுதிப்பாய் Reviewed by Christking on May 05, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.