Enthan Navil Pudhu Pattu - எந்தன் நாவில் புதுபாட்டு - Christking - Lyrics

    Enthan Navil Pudhu Pattu - எந்தன் நாவில் புதுபாட்டு

    எந்தன் நாவில் புதுபாட்டு
    எந்தன் இயேசு தருகிறார்

    ஆனந்தம் கொள்ளுவேன்
    அவரை நான் பாடுவேன் -உயிருள்ள
    நாள் வரையில் அல்லேலூயா

    பாவ இருள் என்னை வந்து
    சூழ்ந்து கொள்கையில் -தேவனவர்
    தீபமாய் என்னை தேற்றினார்

    வாதை நோயும் வந்தபோது
    வேண்டல் கேட்டிட்டார் -பாதை காட்டி
    துன்பமெல்லாம் நீக்கிமீட்டிட்டார்

    சேற்றில் வீழ்ந்த என்னையவர்
    தூக்கியெடுத்தார் -நாற்றமெல்லாம்
    ஜீவ இரத்தம் கொண்டு மாற்றினார்

    தந்தை தாயும் நண்பர் உற்றார்
    யாவுமாயினார் - நிந்தை தாங்கி
    எங்குமவர் மேன்மை சொல்லுவேன்

    இவ்வுலக பாடு என்னை
    என்னை செய்திடும் -அவ்வுலக
    வாழ்க்கைக் காண காத்திருக்கிறேன்
    Enthan Navil Pudhu Pattu - எந்தன் நாவில் புதுபாட்டு Enthan Navil Pudhu Pattu - எந்தன் நாவில் புதுபாட்டு Reviewed by Christking on May 05, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.