Ha Bakiya Dheiva Baktharo - ஆ பாக்கிய தெய்வ பக்தரே - Christking - Lyrics

    Ha Bakiya Dheiva Baktharo - ஆ பாக்கிய தெய்வ பக்தரே

    1. ஆ பாக்கிய தெய்வ பக்தரே;
    உம் நீண்ட போர் முடிந்ததே;
    வெற்றிகொண்டே, சர்வாயுதம்
    வைத்துவிட்டீர் கர்த்தாவிடம்;
    சீர் பக்தரே, அமர்ந்து நீர்
    இயேசுவின் பாதத்தில் வாழ்வீர்.

    2. ஆ பாக்கிய தெய்வ பக்தரே;
    மா அலுப்பாம் பிரயாணத்தை
    முடித்து, இனி அலைவும்
    சோர்வும் இல்லாமல் வாழ்ந்திடும்;
    சீர் பக்தரே, அமர்ந்து நீர்
    நல் வீட்டில் இளைப்பாறுவீர்.

    3. ஆ பாக்கிய தெய்வ பக்தரே;
    இஜ்ஜீவ யாத்திரை ஒய்ந்ததே;
    இப்போதபாய புயலும்
    உம்மைச் சேராது கிஞ்சித்தும்;
    சீர் பக்தரே, அமர்ந்து நீர்
    இன்பத் துறையில் தங்குவீர்.

    4. ஆ பாக்கிய தெய்வ பக்தரே;
    உம் மேனி மண்ணில் தூங்கவே,
    மாண்பாய் எழும்புமளவும்
    விழித்துக் காத்துக்கொண்டிரும்;
    சீர் பக்தரே, மகிழ்ந்து நீர்
    நம் ராஜா வருவார் என்பீர்.

    5. கேளும், தூயோரின் நாதரே,
    பரிந்து பேசும் மீட்பரே,
    வாழ் நாள் எல்லாம், நல்லாவியே,
    சீர் பக்தரோடு நாங்களும்
    மேலோகில் சேரச் செய்திடும்.
    Ha Bakiya Dheiva Baktharo - ஆ பாக்கிய தெய்வ பக்தரே Ha Bakiya Dheiva Baktharo - ஆ பாக்கிய தெய்வ பக்தரே Reviewed by Christking on May 01, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.