Kangalai Yeredupen - கண்களை ஏறெடுபேன் - Christking - Lyrics

    Kangalai Yeredupen - கண்களை ஏறெடுபேன்

    கண்களை ஏறெடுபேன் - மாமேரு நேராய் என்
    கண்களை ஏறெடுபேன்.

    விண்மண் உண்டாக்கிய வித்தகனிடமிருந்
    தெண்ணில்லா வொத்தாசை என்றனுக்கே வரும்.

    காலைத்தள்ளாட வொட்டார் - உறங்காது காப்பவர்
    காலைத்தள்ளாட வொட்டார்,
    வேலையில் நின்றிஸ்ர வேலரைக் காத்தவர்
    காலையும் மாலையும் கண்ணுறங்காரவர்.

    பக்க நிழல் அவரே - எனை ஆதரித்திடும்
    பக்க நிழல் அவரே
    எக்கால நிலைமையும் எனைச் சேதப்படுத்தாது
    அக்கோலம் கொண்டென்னை அக்காவல் புரியவே

    எல்லாத் தீமைகட்கும் என்னை விலக்கியே
    எல்லாத் தீமைகட்கும்
    பொல்லா உலகினில் போக்குவரத்தையும்
    நல்லாத்துமாவையும் நாடோறும் காப்பவர்
    Kangalai Yeredupen - கண்களை ஏறெடுபேன் Kangalai Yeredupen - கண்களை ஏறெடுபேன் Reviewed by Christking on May 07, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.