Kartharai Naan Ekkalathilum - கர்த்தரை நான் எக்காலத்திலும் - Christking - Lyrics

    Kartharai Naan Ekkalathilum - கர்த்தரை நான் எக்காலத்திலும்

    கர்த்தரை நான் எக்காலத்திலும்
    ஸ்தோத்தரிப்பேன் என் வாழ்வினிலே - 2
    எப்போதும் அவர் துதி
    நிறைந்திருக்கும் என் நாவினிலே - 2

    நித்தம் என் உள்ளம் கர்த்தருக்குள்ளே
    இத்தரை மீதில் மேன்மை பாராட்டும் - 2
    சிறுமைப்பட்டோர் அதைக் கேட்கின்ற நேரம்
    பெருமிதம் கொள்வார் பேரின்பம் காண்பார்
    என்னோடே மன்னவனை மகிமை படுத்துங்கள்
    உயர்த்திடுங்கள் - 2

    ஆண்டவர் அவரைத் தேடி நின்றேனே
    வீண் பயம் நீங்க செவி கொடுத்தாரே - 2
    வேண்டுதலோடு வேந்தனின் முகத்தை
    காண்கின்ற வேளை திடன் அளித்தாரே - 2
    நல்லவர் கர்த்தர் என்பதை நாளும்
    ருசித்துக் களித்திடுங்கள் -2

    சிங்கத்தின் சிசுக்கள் தங்களின் இரைக்காய்
    தாழ்ச்சி அடைந்தே ஏங்கிடக்கூடும் - 2
    துங்கவன் அவரை நம்பிடுவோர்க்கு குறைவின்றி
    வாழ்வில் நன்மைகள் கூடும் - 2
    காக்கும் நல் தேவனை நம்பிடுவேன்
    பாக்யவானென வாழ்ந்திருப்பேன் - 2
    Kartharai Naan Ekkalathilum - கர்த்தரை நான் எக்காலத்திலும் Kartharai Naan Ekkalathilum - கர்த்தரை நான் எக்காலத்திலும் Reviewed by Christking on May 07, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.