Kartharai Thedina Naatkal - கர்த்தரை தேடின நாட்களெல்லாம் - Christking - Lyrics

    Kartharai Thedina Naatkal - கர்த்தரை தேடின நாட்களெல்லாம்

    கர்த்தரை தேடின நாட்களெல்லாம்
    காரியம் வாய்க்கச் செய்தாரே
    எத்தனை எத்தனை நன்மைகளோ
    இயேசப்பா செய்தாரே - நான்

    இறுதிவரை என் வாழ்வு
    இயேசப்பா உமக்குத்தானே

    கால்கள் தள்ளாட விடமாட்டார்
    காக்கும் தேவன் உறங்க மாட்டார்
    இஸ்ராயேலைக் காக்கிறவர்
    எந்நாளும் தூங்க மாட்டார் - இறுதி

    கர்த்தர் என்னைக் காக்கின்றார்
    எனது நிழலாய் இருக்கின்றார்
    பகலினிலும், இரவினிலும்
    பாதுகாக்கின்றார்

    போகும் போதும் காக்கின்றார்
    திரும்பும் போதும் காக்கின்றார்
    இப்போதும், எப்போதும்
    எந்நாளும் காத்திடுவார்
    Kartharai Thedina Naatkal - கர்த்தரை தேடின நாட்களெல்லாம் Kartharai Thedina Naatkal - கர்த்தரை தேடின நாட்களெல்லாம் Reviewed by Christking on May 07, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.