Magane Un Nenjsenakku - மகனே உன் நெஞ்செனக்குத் - Christking - Lyrics

    Magane Un Nenjsenakku - மகனே உன் நெஞ்செனக்குத்

    மகனே உன் நெஞ்செனக்குத் தாராயோ
    மோட்ச வாழ்வை தருவேன் இது பாராயோ

    அகத்தின் அசுத்தமெல்லாம் துடைப்பேனே
    பாவ அழுக்கை நீக்கி அருள் கொடுப்பேனே

    உன்பாவம் முற்றும் பரிகரிப்பேனே -அதை
    உண்மையாய் அகற்ற யான் மரித்தேனே

    பாவம் அனைத்துமே விட்டோடாயோ -நித்ய
    பரகதி வாழ்வை இன்றே தேடாயோ

    உலக வாழ்வினை விட்டகல்வாயே - மகா
    உவப்பாய்க் கதி ஈவேன் மகிழ்வாயே

    உன்றன் ஆத்துமத்தை நீ படைப்பாயே
    அதில் ஊக்கமாய் வசிக்க இடம் கொடுப்பாயே
    Magane Un Nenjsenakku - மகனே உன் நெஞ்செனக்குத் Magane Un Nenjsenakku - மகனே உன் நெஞ்செனக்குத் Reviewed by Christking on May 07, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.