Marakkapaduvathillai Nee Ennal - மறக்கப்படுவதில்லை நீ - Christking - Lyrics

    Marakkapaduvathillai Nee Ennal - மறக்கப்படுவதில்லை நீ

    மறக்கப்படுவதில்லை நீ
    என்னால் மறக்கப்படுவதில்லை - 2

    கலங்காதே என் மகனே(மகளே)
    கைவிட நான் மனிதனல்ல - 2
    தாய் மறந்தாலும் தந்தை வெறுத்தாலும்
    நான் உன்னை மறப்பதில்லை - 2
    என் கண்முன்னே நீதானே
    உன்னை நான் உருவாக்கினேன் - 2 -கலங்காதே

    உள்ளங்கையிலே பொறித்து வைத்துள்ளேன்
    எதிர்கால பயம் வேண்டாம் - 2
    உன் ஏக்கமெல்லாம் ஈடேறும்
    கொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேறும் - 2

    மலைகள் குன்றுகள் விலகிப் போகலாம்
    விலகாது என் கிருபை - 2
    விலை கொடுத்து வாங்கி உள்ளேன் - உன்னை
    எனக்கே நீ சொந்தம் - 2

    ஏசேக்கு சித்னா முடிந்து போனது
    ரெகோபோத் தொடங்கிவிட்டது - 2
    நீ பலுகி பெருகிடுவாய்
    நீ குறுகி போவதில்லை - 2
    Marakkapaduvathillai Nee Ennal - மறக்கப்படுவதில்லை நீ Marakkapaduvathillai Nee Ennal - மறக்கப்படுவதில்லை நீ Reviewed by Christking on May 07, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.