Muzhu Idhayathodu Ummai - முழு இதயத்தோடு உம்மை - Christking - Lyrics

    Muzhu Idhayathodu Ummai - முழு இதயத்தோடு உம்மை

    முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன்
    உன்னதமானவரே
    அதிசயங்களெல்லாம் - உம்
    எடுத்துரைப்பேன் அதிசயமானவரே - 2

    உன்னதமானவரே
    என் உறைவிடம் நீர்தானே - 2 என்
    உயர்த்துகிறேன் வாழ்த்துகிறேன்
    வணங்குகிறேன் உம்மை போற்றுகிறேன் - 2

    ஒடுக்கப்படுவோருக்கு அடைக்கலமே
    நெருக்கடி வேளையில் புகலிடமே - 2
    நெருக்கடி வேளையில் புகலிடமே - 2

    நாடித் தேடி வரும் மனிதர்களை
    தகப்பன் கைவிடுவதேயில்லை
    ஒருபோதும் கைவிடுவதேயில்லை

    எழுந்தருளும் என் ஆண்டவரே
    எதிரி கை ஓங்கவிடாதேயும் - 2
    எதிரியின் கை ஓங்கவிடாதேயும் - 2

    வறியவர்கள் மறக்கப்படுவதில்லை
    எளியோர் நம்பிக்கை வீண்போவதில்லை
    Muzhu Idhayathodu Ummai - முழு இதயத்தோடு உம்மை Muzhu Idhayathodu Ummai - முழு இதயத்தோடு உம்மை Reviewed by Christking on May 07, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.