Paarum Paarum - பாரும் பாரும் - Christking - Lyrics

    Paarum Paarum - பாரும் பாரும்

    பாரும், பாரும், ஐயா, - எனை அன்பாகப்
    பாரும், பாரும், ஐயா, - திருக்கண்கொண்டு

    பாரில் மகிழ் வெல்லைப் பதி மேவிய பரா
    பாவ விமோசனா, தீவினை நாசனா, மூவுலகாசனா, ஜீவனே;

    பாவநாசர் பிணையே, - பரிபூரண-மேவும் உயர் துணையே, வினையை எய்யும்
    தேவ திருக் கணையே,- உலகில் உள்ள- யாவர் உனக்கிணையே!
    பூவில் இவ்வாண்டெமைப் புனித நெறியில் காவும்.
    போதக நாயனே, மாதவ தூயனே.
    கோதறும் ஆயனே; ஆதியின் சேயனே!

    தாலந்தினில் இருளை- அகற்றிமிகச்-சீலந்தரும் அருளே. அடியர்கட்கனு
    கூலம் நிறைதெருளே, - மனுடர்களின்-கோலம் உறும் பொருளே,
    காலத்தை எண்ண மெய்க் கருத்தை எனக்களியும்;
    காரண நேசனே, ஆரண வாசனே,
    Paarum Paarum - பாரும் பாரும் Paarum Paarum - பாரும் பாரும் Reviewed by Christking on May 16, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.