Pani Pola Peiyum - பனி போல பெய்யும் பரிசுத்தரே - Christking - Lyrics

Pani Pola Peiyum - பனி போல பெய்யும் பரிசுத்தரே

பனி போல பெய்யும் பரிசுத்தரே
மழையாக பொழியும் ஆவியே

ஆவியே.. ஆவியே..
மழையாக பொழியும் ஆவியே

மென்மை (வெண்மை) யானவரே
மேகஸ்தம்பமே
ஊற்றுத் தண்ணீர் ஜீவநதி
ஆனந்த தைலமே

யுத்தங்கள் செய்பவரே
யோர்தானைப் பிளந்தவரே
பெருமழையாய் பிரவேசித்த
உள்ளங்கை மேகமே

வறண்ட நிலங்களிலே
வாய்க்கால்கள் அமைப்பவரே
கனிதரும் மரமாக
காப்பாற்றி வளர்ப்பவரே
Pani Pola Peiyum - பனி போல பெய்யும் பரிசுத்தரே Pani Pola Peiyum - பனி போல பெய்யும் பரிசுத்தரே Reviewed by Christking on May 16, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.