Potruvom Devanai Indrum - போற்றுவோம் தேவனை - Christking - Lyrics

Potruvom Devanai Indrum - போற்றுவோம் தேவனை

போற்றுவோம் தேவனை
இன்றும் என்றுமாய்
ஆவியுடன் உண்மையுடன்
ஆராதிப்போம் இயேசுவை

சென்ற நாளினில் சுகமுடன்
காத்த தேவனை ஸ்தோத்திரிப்போம்
தந்தேன் எந்தனை வந்தேன் பாதமே
என்றும் சொந்தமாய்

தேவ ஜனத்தின் ஆகாரமாம்
மன்னா புசித்து ஜீவித்தாரே
என்றும் ஜீவித்திட கர்த்தர் இயேசுவில்
என்றும் வளருவோம்

தேவ கிருபை தங்கிடவே
தேவ தேவனை ஆராதிப்போம் - உள்ளம்
நொறுங்கியே உண்மை மனதுடன்
என்றும் தொழுகுவோம்

தேவ ஆலயம் மகிமையால்
நிரம்பி தங்கிட ஆராதிப்போம்
துதி பலியுடன் போற்றி புகழ்ந்துமே
சாற்றி ஆராதிப்போம்
Potruvom Devanai Indrum - போற்றுவோம் தேவனை Potruvom Devanai Indrum - போற்றுவோம் தேவனை Reviewed by Christking on May 16, 2018 Rating: 5

No comments:

Powered by Blogger.