Tharagame Pasithagathudan - தாரகமே பசிதாகத்துடன் உம்மிடம் - Christking - Lyrics

    Tharagame Pasithagathudan - தாரகமே பசிதாகத்துடன் உம்மிடம்

    தாரகமே பசிதாகத்துடன் உம்மிடம்
    வேகத்துடனே வாறேன்

    சீருஞ் செல்வமும் பெற்றுத் தேறும்படிக் கென்னிடம்
    சேரும் யாரையும் ஒரு போதுந் தள்ளிடே னென்றீர்

    பாவமகலத் தேவ கோபமது ஒழியப்
    பாடுபட்டுயிர் விடுத்தீர் -பின்னும்
    ஜீவ போசன மெனக்கீய உமையே அந்தச்
    சிலுவைதனிலே பகுத்தீர்
    மேவியெனை நெருக்கித் தாவும் பவத்தைக் கொன்று
    சேவித் துயிர்பிழைக்க தேவே உமையுட் கொள்ள

    காணாதொழிந்த ஆடு வீணாய்ப் போகாமல் அதை
    கண்டுபிடித்தி ரட்சித்தீர்-அது
    பேணுதலுடன் பரிபூரண மடைந்திடப்
    பேருல குதித்தே னென்றீர்
    வேணுமுமது நீதி பூண நிறைவா யுன்றன்
    மாணருளுந் திருப்தியானே பெற உம்மிடம்

    தந்த திருவசனம் உந்தம் இராப்போசனம்
    தகமை எத்தனமாமே -யான்
    சிந்தை பணிந்தவற்றை என்றன் மனதுட்கொள்ளத்
    தேவசுத்தாவி தாமே
    உந்தம் தசையுதிர விந்தை விருந்தினை யான்
    சந்ததமுண்டு துதி சாற்ற அருள் செய்வீரே
    Tharagame Pasithagathudan - தாரகமே பசிதாகத்துடன் உம்மிடம் Tharagame Pasithagathudan - தாரகமே பசிதாகத்துடன் உம்மிடம் Reviewed by Christking on May 28, 2018 Rating: 5
    Powered by Blogger.