Thottu Sugam Akum Aya - தொட்டு சுகமாக்குமையா இயேசுவே - Christking - Lyrics

    Thottu Sugam Akum Aya - தொட்டு சுகமாக்குமையா இயேசுவே

    தொட்டு சுகமாக்குமையா இயேசுவே
    நீர் தொட்டால் போதும் எந்தன்
    வாழ்க்கை மாறுமே - நீர் -(2)
    மாறுமே... எல்லாம் மாறுமே...(2)

    எட்டிக்காய் போல் கசக்கும் எந்தன்
    வாழ்க்கையை - உம் பாசக் கைகள்
    நீட்டி இன்று தொடணுமே
    கட்டிப்பிடித்தேன் உந்தன் பாதம்
    கர்த்தா எந்தன் கதறல் கேளும்
    தொடணுமே என்னை தொடணுமே

    கடனும் முடனும் என்னை முடக்க
    முடியாதே - கடல்மேல் நடந்த
    கர்த்தர் என்னோடிக்கின்றார்
    கடல்மேல் என்னை நடக்கச் செய்வார்
    கடனை எல்லாம் மாறச் செய்வார்
    மாறுமே.... எல்லாம் மாறுமே...

    குறைவை எண்ணி புலம்புவதை
    நிறுத்துவேன் - நிறைவாய்
    என்னை நடத்துபவர் இருப்பதால்
    இல்லை என்பது எனக்கு இல்லை
    தொல்லை என்பது துளியும் இல்லை
    இல்லையே தொல்லை இல்லையே
    Thottu Sugam Akum Aya - தொட்டு சுகமாக்குமையா இயேசுவே Thottu Sugam Akum Aya - தொட்டு சுகமாக்குமையா இயேசுவே Reviewed by Christking on May 28, 2018 Rating: 5

    1 comment:

    Powered by Blogger.