Andha sooriyan - அந்த சூரியன் - Christking - Lyrics

    Andha sooriyan - அந்த சூரியன்

    அந்த சூரியன் [C min T95 6/8]

    அந்த சூரியன் அந்த சந்திரன்
    இந்த பூலோகம் யாவும்
    அந்த மழைத்துளி இந்த பனித்துளி
    இயற்கை அழகு யாவும்
    படைப்பே உந்தன் படைப்பே
    அதை நினைத்து மனம் மகிழ்ந்து
    உம்மை வாழ்த்திடுவேனே

    Andha sooriyan andha chandhiran
    Indha boologam yaavum
    Andha mazhaithuli indha panithuli
    Iyarkai azhagu yaavum
    Padaippe undhan padaippe
    Adhai ninaithu manam magizhndhu
    Ummai vaazhthiduvene

    வான் முகிலும் வண்ண மலரும் விளையாடிடும்
    தேன் துளியும் தென்றல் காற்றும் சுகம் தந்திடும்
    மலைச்சாரல் சொல்லிடும் பள்ளத்தாக்கும் பாடிடும்
    நீரே தேவன்
    எல்லாம் உம் கைவண்ணமே

    Vaan mugilum vanna malarum vilaiyaadidum
    Then thuliyum thendral kaatrum sugam thandhidum
    Malaichaaral sollidum pallathaakkum paadidum
    Neere dhevan
    Ellaam um kaivanname

    மண்ணினாலே என்னையுமே படைத்தீரே நீர்
    கண்மணி போல் கருத்துடன் காத்தீரே நீர்
    விழுந்தாலும் எழுப்பிவிட்டீர் அழுதாலும் துடைத்துவிட்டீர்
    கண்ணீரை
    இதயத் துடிப்பும் நீரே

    Manninaale ennaiyume padaitheere neer
    Kanmani pol karuthudan kaatheere neer
    Vizhundhaalum ezhuppivitteer
    Azhudhaalum thudaithuvitteer
    Kanneerai
    Idhaya thudippum neere
    Andha sooriyan - அந்த சூரியன் Andha sooriyan - அந்த சூரியன் Reviewed by Christking on June 29, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.