Samaadhaanam vendumaa jebam seivom - சமாதானம் வேண்டுமா ஜெபம் செய்வோம் - Christking - Lyrics

    Samaadhaanam vendumaa jebam seivom - சமாதானம் வேண்டுமா ஜெபம் செய்வோம்

    சமாதானம் வேண்டுமா (ஜெபம் செய்வோம்) [E min T60 4/4]

    சமாதானம் வேண்டுமா ஜெபம் செய்வோம்
    சங்கடங்கள் நீங்கவே ஜெபம் செய்திடுவோம்
    நிலை மாற வேண்டுமா ஜெபம் செய்வோம்
    மனம் மாற வேண்டுமா ஜெபம் செய்திடுவோம்

    Samaadhaanam vendumaa jebam seivom
    Sangadangal neengave jebam seidhiduvom
    Nilai maara vendumaa jebam seivom
    Manam maara vendumaa jebam seidhiduvom

    முழங்காலில் நாம் நின்றுவிட்டால்
    முடியாது என்று ஒன்றுமில்லை
    வாக்குதத்தம் நாம் பற்றிக்கொண்டால்
    வாழ்வில் இனி ஒரு தோல்வியில்லை

    Muzhangaalil naam nindru vittaal
    Mudiyaadhu endru ondrum illai
    Vaakkuthatham naam patrikondaal
    Vaazhvil ini oru tholvi illai

    வேதனைகள் நீங்கவே ஜெபம் செய்வோம்
    வெற்றி வாழ்க்கை வாழவே ஜெபம் செய்திடுவோம்

    Vedhanaigal neengave jebam seivom
    Vetri vaazhkai vaazhave jebam seidhiduvom

    எலியாவும் ஒரு மனிதன்தான்
    ஜெபித்திட மழை மறைந்ததே
    மீண்டும் அவன் வந்து ஜெபிக்கையில்
    நின்ற மழை அன்று பொழிந்ததே

    Eliyaavum oru manidhan thaan
    Jebithida mazhai maraindhadhe
    Meendum avan vandhu jebikkaiyil
    Nindra mazhai andru pozhindhadhe

    விசுவாசத்தோடு நாம் ஜெபம் செய்வோம்
    கருத்தாக யாவரும் ஜெபம் செய்திடுவோம்

    Visuvaasathodu naam jebam seivom
    Karuthaaga yaavarum jebam seidhiduvom

    வானவரே விண்ணப்பம் செய்யும்போது
    மானிடர் நாம் ஜெபிக்க தயங்கலாகுமோ
    கற்றுத் தந்தார் நாமும் ஜெபித்திட - அவர்
    சித்தப்படி என்றும் நடந்திட

    Vaanavare vinnappam seiyumbodhu
    Maanidar naam jebikka thayangalaagumo
    Katruthandhaar naamum jebithida
    Avar sithapadi endrum nadandhida

    மனத் தாழ்மையோடு நாம் ஜெபம் செய்வோம்
    உயிர் உள்ள நாள் வரை ஜெபம் செய்திடுவோம்.

    Manathaazhmaiyodu naam jebam seivom
    Uyir ulla naalvarai jebam seidhiduvom
    Samaadhaanam vendumaa jebam seivom - சமாதானம் வேண்டுமா ஜெபம் செய்வோம் Samaadhaanam vendumaa jebam seivom - சமாதானம் வேண்டுமா ஜெபம் செய்வோம் Reviewed by Christking on June 29, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.