Yeshua yeshua endra naamam - யெஷுவா யெஷுவா என்ற நாமம் - Christking - Lyrics

    Yeshua yeshua endra naamam - யெஷுவா யெஷுவா என்ற நாமம்

    யெஷுவா யெஷுவா [F min T95 4/4]
    யெஷுவா யெஷுவா என்ற நாமம்
    உனக்கும் எனக்கும் போதும் போதும்
    இனிமையான நாமம் ஒரு இணையில்லாத நாமம்
    முழங்கால்கள் மடங்கிடும் நாவுகள் சொல்லிடும்
    அனைவரும் தொழுதிடும்

    Yeshua yeshua endra naamam
    Unakkum enakkum podhum podhum
    Inimaiyaana naamam oru inaiyillaadha naamam
    Muzhangaalgal madangidum naavugal sollidum
    Anaivarum thozhudhidum

    நீதியின் சூரியனே நீரே நாயகனே
    ஏழைகள் காவலனே யெஷுவா யெஷுவா
    பரமனை பிள்ளைகள் காணவே சிலுவையில் மரித்தவரே
    உயிரோடு எழுந்தவர் ஆதலால் மரணத்தை ஜெயித்தவரே

    Needhiyin sooriyane neere naayagane
    Yezhaigal kaavalane yeshua yeshua
    Paramanai pillaigal kaanave siluvaiyil marithavare
    Uyirodu ezhundhavar aadhalaal maranathai jeyithavare

    கிருபையில் பூரணரே சிருஷ்டிப்பின் காரணரே
    மூன்றில் ஒன்றானவரே யெஷுவா யெஷுவா
    பாரங்களை சுமந்திடும் சினேகிதன் பரமனின் தவப்புதல்வன்
    பாவங்களை அகற்றிடும் தாயகன் மகிமையிலே முதல்வன்

    Kirubaiyil pooranare sirushtippin kaaranare
    Moondril ondraanavare yeshua yeshua
    Baarangalai sumandhidum snegidhan paramanin thavapudhalvan
    Paavangalai agatridum thaayagan magimaiyile mudhalvan

    ஆதியில் இருந்தவரே ஆவியில் நிறைந்தவரே
    ஆத்துமா இரட்சகரே யெஷுவா யெஷுவா
    ஒப்புரவை உண்டுபண்ணும் வேலையை துப்புரவாய் முடித்தவரே
    முன்குறிக்கப்பட்டவரை மீட்கவே ஜீவனை கொடுத்தவரே

    Aadhiyil irundhavare aaviyil niraindhavare
    Aathuma ratchagare yeshua yeshua
    Oppuravai undu pannum velaiyai thuppuravaai mudithavare
    Munkurikkappattavarai meetkave jeevanai koduthavare
    Yeshua yeshua endra naamam - யெஷுவா யெஷுவா என்ற நாமம் Yeshua yeshua endra naamam - யெஷுவா யெஷுவா என்ற நாமம் Reviewed by Christking on June 29, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.