Senaigalin Dhevanaagiya - சேனைகளின் தேவனாகிய - Christking - Lyrics

    Senaigalin Dhevanaagiya - சேனைகளின் தேவனாகிய

    சேனைகளின் தேவனாகிய [F min 130 4/4]
    சேனைகளின் தேவனாகிய கர்த்தரின் நாமத்தில் நான் வருகிறேன்
    சர்வவல்ல தேவனாகிய கர்த்தரின் நாமத்தில் யுத்தம் புரிகிறேன்

    Senaigalin Dhevanaagiya kartharin naamathil
    Naan varugiren
    Sarvavalla dhevanaagiya kartharin naamathil
    Yutham purigiren

    வெற்றி முழக்கம் அது எங்கள் பழக்கம்
    கர்த்தர் நாமமே தீமைகள் விலக்கும்

    Vetri muzhakkam adhu engal pazhakkam
    Karthar naamame theemaigal vilakkum

    பட்டயத்தை நம்பவில்லையே என் வில்லையும் நான் நம்பவில்லையே
    உம் வார்த்தையைத்தான் நம்பி உள்ளேன் வாக்குத்தத்தம் பற்றிக்கொண்டேன்
    வெட்கப்பட்டுப் போவதில்லையே

    Pattayathai nambavillaye en villaiyum
    Naan nambavillaye
    Um vaarthaiyai thaan nambi ullen
    Vaakuthaththam patrikonden
    Vetkapattu povadhillaiye

    மாம்சத்தோடும் சண்டையில்லையே இங்கு ரத்தத்தோடும் சண்டையில்லையே
    இந்த பூலோகத்தின் அதிபதியோடும் பொல்லாத ஆவிகளோடும்
    அன்றாடம் ஓர் யுத்தம் செய்கிறேன்

    Maamsathodum sandai illaiye
    Ingu raththathodum sandai illaiye
    Indha boologathin adhibadhiyodum
    Pollaadha aavigalodum andraadam
    Or yuththam seigiren

    என்னை கீழே தள்ளிவிட்டானே சத்ரு ஊர் முழுதும் தூற்றி விட்டானே
    என் தேவன் என்னை தூக்கிவிட்டார் நிந்தைதனை மாற்றிவிட்டார்
    சாம்பலெல்லாம் சிங்காரம் இன்றே

    Ennai keezhe thalli vittaane
    Sathru oor muzhudhum thootri vittaane
    En dhevan ennai thooki vittaar
    Nindhai thanai maatri vittaar
    Saambal ellaam singaaram indre
    Senaigalin Dhevanaagiya - சேனைகளின் தேவனாகிய Senaigalin Dhevanaagiya - சேனைகளின் தேவனாகிய Reviewed by Christking on June 29, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.