Ulagai ratchippavare - உலகை இரட்சிப்பவரே

    Ulagai ratchippavare - உலகை இரட்சிப்பவரே

    உலகை இரட்சிப்பவரே [D min T115 4/4]
    உலகை இரட்சிப்பவரே உன்னத தெய்வம் நீரே
    உயர்ந்த அடைக்கலமே நீர் உயிரின் உறைவிடமே

    Ulagai ratchippavare
    Unnadha dheivam neere
    Uyarndha adaikkalame - neer
    Uyirin uraividame

    காலங்கள் தொடங்கிடும் முன் கர்த்தராய் இருந்தவரே
    பூமியை சுழலச் சொல்லி கட்டளை கொடுத்தவரே
    வானத்தை விரிப்பதும் இஷ்டம்போல மடிப்பதும்
    உமக்கு கடினமில்லை
    மின்னலை கைகளுக்குள் மூடி வைத்து நடக்கிறீர்
    உமக்கு நிகருமில்லையே
    உம்மிடம் அனுமதி கேட்டே அணுவும் அசைகின்றதே
    அண்டசராசரம் யாவும் உமக்குள் அடங்கிடுதே

    Kaalangal thodangidum mun kartharaai irundhavare
    Boomiyai suzhalacholli kattalai koduthavare
    Vaanathai virippadhum ishtampola madippadhum
    Umakku kadinamillai
    Minnalai kaigalukkul moodivaithu nadakkireer
    Umakku nigarumillaiye
    Ummidam anumadhi kette anuvum asaigindradhe
    Anda saraasaram yaavum umakkul adangidudhe

    எங்களை கிறிஸ்துவுக்குள்ளே தெரிந்துகொண்டவரும் நீர்
    இரட்சிப்பின் திட்டங்களெல்லாம் முன்னரே அறிந்திருந்தீர்
    கிறிஸ்துவை எங்களுக்காய் சாபமாக மாற்றியது
    அன்பினை அறிவிக்கத்தான்
    அன்றாடம் வெற்றிபெற பரிசுத்த ஆவி உண்டு
    பேரன்பை நிரூபிக்கத்தானே
    உமது மகிமைக்குத்தானே எங்களை படைத்துவிட்டீர்
    எங்களை மகிமையில் சேர்க்க அன்புடன் அழைத்துவிட்டீர்

    Engalai kristhuvukkulle therindhukondavarum neer
    Ratchippin thittangal ellaam munnare arindhirundheer
    Kristhuvai engalukkaai saabamaaga maatriyadhu
    Anbinai arivikkaththaan
    Andraadam vetripera parisutha aavi undu
    Peranbai niroobikkath thaane
    Umadhu magimaikku thaane Engalai padaithuvitteer
    Engalai magimai serka anbudan azhaithuvitteer
    Ulagai ratchippavare - உலகை இரட்சிப்பவரே Ulagai ratchippavare - உலகை இரட்சிப்பவரே Reviewed by Christking on June 29, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.