Unnatha Anubavathil - உன்னத அனுபவத்தில் என்னை - Christking - Lyrics

    Unnatha Anubavathil - உன்னத அனுபவத்தில் என்னை

    உன்னத அனுபவத்தில் என்னை
    அழைத்து சென்றிடுவீர்

    தேவனே என் இயேசுவே
    ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
    பெலனே என் கோட்டையே
    ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
    அல்லேலூயா அல்லேலூயா

    கருவில் என்னை தெரிந்து கொண்டு
    முன் குறித்தீரே - இரத்தத்தினாலே
    நீதிமானாக்கி மகிமைப்படுத்தினீரே
    கர்த்தாவே உந்தன் கிருபைகளாலே
    என்றும் என்னை சூழ்ந்திடுவீர்
    கர்த்தாவே உந்தன் இரக்கங்களாலே
    நன்மையினாலே என்னை நிறைந்திடுவீர்

    மூன்றாம் வானம் வரையில்
    என்னை எடுத்துச் சென்றிடுவீர்
    தூதர்கள் பேசும் - பாஷைகள் பேசி
    ஆராதிக்கச் செய்திடுவீர்
    கேருபீன்கள் சேராபீன்கள்
    பாடிடும் பாடலைக் கேட்டிடுவேன்
    அவர்களோடு நானும் சேர்ந்து
    ஆவியில் நிறைந்து பாடிடுவேன்

    ஆபிரகாமை அழைத்து அவரை
    ஆசீர்வதித்தவரே - ரெகோபோத்தாக
    ஈசாக்கைப் பலுகி பெருகச் செய்தவரே
    யாக்கோபை ஆசீர்வதித்தது போல
    என்னையும் ஆசீர்வதித்திடுவீர்
    யோசேப்பை உயர்த்தி மகிழ்ந்தது போல
    என்னையும் உயர்த்தி மகிழ்ந்திடுவீர்
    Unnatha Anubavathil - உன்னத அனுபவத்தில் என்னை Unnatha Anubavathil - உன்னத அனுபவத்தில் என்னை Reviewed by Christking on June 02, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.