Ummai Pirinthu Vazha - உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா - Christking - Lyrics

    Ummai Pirinthu Vazha - உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா

    உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா
    இயேசையா இயேசையா

    திராட்சை செடிகள் கொடியாக
    உம்மில் நிலைத்திருப்பேன்
    மிகுந்த கனி கொடுப்பேன்
    உம் சீடனாயிருப்பேன் - நான்

    முன்னும் பின்னும் என்னை நெருக்கி
    உம் கரம் வைக்கின்றீர்
    உமக்கு மறைவாய் எங்கே போவேன்
    உம்மை விட்டு எங்கே ஓடுவேன் - நான்

    பகைவர்கள் ஆயிரம் பேசட்டுமே
    பயந்து போக மாட்டேன்
    துன்பங்கள் ஆயிரம் சூழ்ந்தாலும்
    சோர்ந்து போகமாட்டேன் - நான்

    நடந்தாலும் படுத்திருந்தாலும்
    என்னை சூழ்ந்து உள்ளீர்
    என் வழிகளெல்லாம் நீர் அறிவீர்
    எல்லாம் உம் கிருபை - ஐயா

    கர்த்தாவே என்னை ஆராய்ந்து
    அறிந்து இருக்கின்றீர்
    உட்காருதலையும் எழுதலையும்
    அறிந்து இருக்கின்றீர்
    Ummai Pirinthu Vazha - உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா Ummai Pirinthu Vazha - உம்மைப் பிரிந்து வாழ முடியாதையா Reviewed by Christking on June 02, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.