Yedho kirubaiyila vaazhka odudhu - ஏதோ கிருபையில வாழ்க்க ஓடுது - Christking - Lyrics

    Yedho kirubaiyila vaazhka odudhu - ஏதோ கிருபையில வாழ்க்க ஓடுது

    ஏதோ கிருபையில [D min T115 6/8]
    ஏதோ கிருபையில வாழ்க்க ஓடுது
    உங்க இரக்கத்தையே உள்ளம் நாடுது
    எசமான் உங்களத்தானே நம்பி வாழுறேன்
    மாறாத கிருபையத்தான் நம்பி ஓடுறேன்

    Yedho kirubaiyila vaazhka odudhu
    Unga irakkathaiye ullam naadudhu
    Yesamaan ungalathaane nambi vaazhuren
    Maaradha kirubaiyathaan nambi oduren

    சுய நீதிய கழட்டி வெச்சேன்
    உங்க நீதிய உடுத்திகிட்டேன்
    நீதிமானா மாத்துனீங்களே என்ன
    நீதிமானா மாத்துனீங்களே
    செஞ்ச பாவத்த ஒத்துக்கிட்டேன்
    சாஷ்டாங்கமா விழுந்துபுட்டேன்
    மன்னிச்சு அணைக்குறீங்களே
    என்ன மன்னிச்சு அணைக்குறீங்களே

    Suyaneedhiya kazhatti vechen
    Unga needhiya uduthikitten
    Needhimaanaa maathuneengale - enna
    Needhimaanaa maathuneengale
    Senja paavatha othukitten
    Saashtaangamaa vizundhuputten
    Mannichu anaikkureengale - enna
    Mannichu anaikkureengale

    பசிக்கும்போது உணவு தந்து
    ஜெபிக்கும்போது இரங்கி வந்து
    ஆசீர்வதிக்கிறீங்களே என்ன
    ஆசீர்வதிக்கிறீங்களே
    அதிசயமா நடத்துறீங்க
    ஆலோசனைய கொடுக்குறீங்க
    பிள்ளையா ஏத்துக்கிட்டீங்களே
    என்ன பிள்ளையா ஏத்துக்கிட்டீங்களே

    Pasikkum podhu unavu thandhu
    Jebikkumbodhu irangivandhu
    Aaseervadhikkireengale - enna
    Aaseervadhikkireengale
    Adhisayamaa nadathureenga
    Aalosanaiya kodukkureenga
    Pillaiyaa yethukiteengale - enna
    Pillaiyaa yethukiteengale

    உள்ளதில் வசனம் விதைக்கிறீங்க
    உள்ளங்கையில் என்ன வரையுறீங்க
    தகப்பன் நீங்கதானய்யா என்
    தகப்பன் நீங்கதானய்யா
    தவறும்போது திருத்துறீங்க
    தடுக்கும்போது புடிக்கிறீங்க
    தாயும் நீங்கதானய்யா என்
    தாயும் நீங்கதானய்யா

    Ullathil vasanam vedhaikkireenga
    Ullangaiyil enna varaiyureenga
    Thagappan neengadhaanaiyaa - yen
    Thagappan neengadhaanaiyaa
    Thavarumbodhu thiruthureenga
    Thadukkumbodhu pudikkireenga
    Thaayum neengadhaanaiyaa - en
    Thaayum neengadhaanaiyaa
    Yedho kirubaiyila vaazhka odudhu - ஏதோ கிருபையில வாழ்க்க ஓடுது Yedho kirubaiyila vaazhka odudhu - ஏதோ கிருபையில வாழ்க்க ஓடுது Reviewed by Christking on June 29, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.