Yesuve Ummai Polaga - இயேசுவே உம்மைப்போலாக - Christking - Lyrics

    Yesuve Ummai Polaga - இயேசுவே உம்மைப்போலாக

    இயேசுவே உம்மைப்போலாக
    வாஞ்சிக்குதே என்னுள்ளம்

    என் ஆவி ஆத்மா சரீரம்
    முற்றும் படைத்து விட்டேன்
    என்னை ஏற்றுக்கொள்ளும் ஐயனே

    பாவமறியாது பாவமே செய்யாது
    பாரினில் ஜீவித்தீரே
    பரிசுத்தர் உம்மைப் போல் ஜீவிக்கவே
    பெலமதை தாருமையா - உந்தன்

    உபத்திரவம் உண்டு உலகினில் என்று
    உலகத்தை வென்றேனென்றீர்
    உம்மைப்போல் உலகினை ஜெயத்திடவே
    பெலமதை தாருமையா - உந்தன்

    சிலுவை சுமந்தென்றும் என் பின் வராதவன்
    அல்ல என் சீஷன் என்றீர்
    எந்தன் சிலுவையை நான் சுமக்க
    பெலமதைத் தாருமையா - உந்தன்

    தலைசாய்க்க தலமில்லை
    தரணியில் உறவில்லை
    நிலையில்லா பூவில் என்றீர்
    நானும் உம்மைப் போல தியாகம் செய்ய
    பெலமதைத் தாருமையா - உந்தன்

    சீயோன் மலையதில் சிறந்தே இலங்கிடும்
    தேவாட்டுக்குட்டி நீரே
    சீயோனில் உம்முடன் நானிருக்க
    உம்மைப் போல் மாற்றும் ஐயா - என்னை
    Yesuve Ummai Polaga - இயேசுவே உம்மைப்போலாக Yesuve Ummai Polaga - இயேசுவே உம்மைப்போலாக Reviewed by Christking on June 17, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.