Annachi - அண்ணாச்சி : Aayathamaa vol 6 - Christking - Lyrics

    Annachi - அண்ணாச்சி : Aayathamaa vol 6

    LYRICS/TUNES/VOCALS: RAVI BHARATH
    MUSIC: RUFUS RAVI
    MASTERING: JABEZ RAVI
    RHYTHM PROGRAMMING: RUFUS RAVI
    BACKING VOCALS: BENJI, SAM, JABEZ PAUL, JUSTIN, RUFUS RAVI

    அண்ணாச்சி, அண்ணாச்சி
    திருச்சபை என்னாச்சு?
    அண்ணாச்சி, அண்ணாச்சி,
    திருச்சபை இரண்டாச்சு! (2)

    முன்னப்போல இல்ல, என்னத்தான் நான் சொல்ல
    மோசமான சூழ்நிலை, சபையிலே - அண்ணாச்சி

    1) புதுசு புதுசா போதனை
    அத நினைச்சு பார்த்தா ரொம்ப வேதனை - (2)
    இத என்னான்னு கேட்க யாருமில்ல
    இந்த தப்ப சுட்டிக்காட்டினா பெருந்தொல்லை - (2)- முன்னப்போல

    2) வீட்டில வம்புதும்பு நடந்தா
    அத சபையிலே நியாயங் கேட்க வரலாம் - (2)
    ஆனா சபையிலேயே சண்டை நடந்தா
    அந்த சங்கடத்த எங்கபோயி சொல்லலாம்? - (2) - முன்னப்போல

    3) சபைக்குள்ள ஜாதி வந்திருச்சு
    கல்லற வரைக்கும் அது வந்து நின்னுருச்சு - (2)
    அது தான் யூதனென்றும் இல்லையே
    கிரேக்கனென்றும் இல்லையே - (2)
    ஆண்டவர் பார்க்கல ஜாதிய
    ஏய்யா கெடுக்கிற நீதிய?(2) - முன்னப்போல

    4) Worship Leader இங்க Hero
    சபையில் ஆண்டவர் position Zero
    இங்க மகிமையைப் பெறுவது யாரோ
    உங்க சபையின் நிலைய சிந்திப்பீரோ? - முன்னப்போல

    5) பணத்த கொடுத்தா, அது போதும்
    வீட்டிற்கு ஆசீர்வாதம் தட்டு வந்து சேரும் - (2)
    கெட்ட பழக்கத்த நிறுத்தல யாரும்
    இந்த அவல நிலை என்னைக்கு மாறும் - (2) - முன்னப்போல

    ஆண்டவரே, ஆண்டவரே,
    காப்பாத்துங்க ஆண்டவரே, உங்க சபையை
    ஆண்டவரே, ஆண்டவரே
    காப்பாத்துங்க ஆண்டவரே, உங்க சபையை
    ஆண்டவரே, ஆண்டவரே
    காப்பாத்துங்க ஆண்டவரே


    Annachi - அண்ணாச்சி : Aayathamaa vol 6 Annachi - அண்ணாச்சி : Aayathamaa vol 6 Reviewed by Christking on August 28, 2018 Rating: 5
    Powered by Blogger.