En Naavu - என் நாவு நாள்தோறும் - Christking - Lyrics

    En Naavu - என் நாவு நாள்தோறும்

    Song: En Naavu
    Album: En Jeevanae
    Singer: Pastor.P.G.Ramesh
    Music: Stephen J Renswick
    Lyrics: Pastor.P.G.Ramesh

    என் நாவு நாள்தோறும் துதியை சொல்லிடுதே
    என் வாய் நாள்தோறும் புகழைப் பாடிடுதே - (2)
    இயேசு ராஜாவைக் குறித்து கவிதை பாடிடுதே
    என் நாவு விரைவாய் எழுதும் எழுத்தாணி! - (2)

    1) என் இருதயம் நல் விசேஷத்தால்
    என் இருதயம் நல் விசேஷத்தால்
    பொங்கி பொங்கி பொங்கி வழியுதே
    பொங்கி பொங்கி பொங்கி வழியுதே - என் நாவு

    2) மனுபுத்திரரில் நீர் சௌந்தரியமுள்ளவர்
    அருள்வார்த்தை பொழியும் உதடுகளுள்ளவர்
    ஆதலால் தேவனே, என் தேவன் உம்மையே
    என்றென்றைக்கும் ஆசீர்வதிக்கின்றார் - (2) - என் நாவு

    3) சத்தியத்தின் நிமித்தம், சாந்தத்தின் நிமித்தம்
    மகத்துவத்திலே ஜெயமாக வாரும் - (2)
    ஆதலால் தேவனே, தோழரைப் பார்க்கிலும்
    ஆனந்த தைலத்தால் அபிஷேகத்தார் - (2) - என் நாவு

    4) தேவா உம் சிங்காசனம் என்றென்றும் உள்ளது
    நீதி நிறைந்த செங்கோலாய் உள்ளது - (2)
    நீதியை விரும்புகின்றீர் அக்கிரமம் வெறுக்கின்றீர்
    என்றென்றைக்கும் அரசாளுகின்றீர் - (2) - என் நாவு


    En Naavu - என் நாவு நாள்தோறும் En Naavu - என் நாவு நாள்தோறும் Reviewed by Christking on August 28, 2018 Rating: 5
    Powered by Blogger.