Kaana Oorin - கானாவூரின் கல்யாணத்தின் - Christking - Lyrics

    Kaana Oorin - கானாவூரின் கல்யாணத்தின்


    கானாவூரின் கல்யாணத்தின் சிறந்தவரே
    அற்புதமாய் திராட்ச ரசம் கொடுத்தவரே
    விருந்தினர்கள் அகமகிழ செய்தவரே
    குறைவுகளை நிறைவாக்கித் தருபவரே
    உம் மகிமைகளை ஆடிப்பாடித் துதிக்க வந்தோம்
    உம் மகிமைகளை ஆடிப்பாடித் துதிக்க வந்தோம்

    கானாவூரின் கல்யாணத்தின் சிறந்தவரே
    அற்புதமாய் திராட்ச ரசம் கொடுத்தவரே

    அஞ்சு அப்பத்தோட இரண்டு மீனக் கொண்டு
    பலபேரு பசியாறச் செய்தீரே
    வயிறார பசிப் போக செய்தீரே
    தூண்டில் மீன் பிடிச்சு முதல் மீன் வாய்திறந்து
    நாணயத்தை வரியாகக் தொடுத்தீரே
    பேதுரு வழியாகக் கொடுத்தீரே
    கடல் மேல் நீர் நடந்தீர் பெறும் காற்றை நீர் அதட்டி
    கடல் இரையாமல் அடங்கியிருக்கச் செய்தவரே
    கடல் இரையாமல் அடங்கியிருக்கச் செய்தவரே - கானாவூரின்

    தாவீதின் வம்சத்தில மகனாப் புறந்தவரே
    லாசரு உயிர் திரும்ப செய்தீரே
    மரியாளின் மனமகிழ செய்தீரே
    பார்வையற்றவனின் விழிகளைத் திறந்தவரே
    செவிடரின் செவி திறக்க செய்தீரே
    பலரின் நோய் தீர செய்தீரே
    மனுவாய் அவதரித்தீர்
    பலர் செழிக்க உம்மைக் கொடுத்தீர்
    இன்னும் பல மகிமை சொல்வதற்கு வரியில்லையே
    இன்னும் பல மகிமை சொல்வதற்கு வரியில்லையே - கானாவூரின்


    Album - Perinbam
    Music & Lyrics - David Bright
    Vocal - Johnson Sangeetharaj
    Harmony - Elayaraja Indeevaram
    Keys - Midhun Maliakkal
    Music Associate -Elayaraja Indeevaram

    Kaana Oorin - கானாவூரின் கல்யாணத்தின் Kaana Oorin - கானாவூரின் கல்யாணத்தின் Reviewed by Christking on August 18, 2018 Rating: 5
    Powered by Blogger.