Adhi kalaiyil Seenai - அதிகாலையில் சீனாய் - Christking - Lyrics

    Adhi kalaiyil Seenai - அதிகாலையில் சீனாய்

    Song: Jeevan Thappa
    Sung By: Sis. Kala Vincent
    Album: Vazhvhin Geethangal
    Ministries: Jesus Lives

    அதிகாலையில் சீனாய் மலையினில்
    என் ஆண்டவரோடு உலாவுவேன்
    எந்நாளிலும் என் இயேசுவின்
    பாதம் விழுந்து நான் தொழுகுவேன் - (2)

    1) ஜீவன் தப்ப மலைக்கு ஓடுவேன்
    ஜீவனுள்ள ஆண்டர் சத்தம் கேட்பேன் - 2
    சமபூமியில் நான் நிற்பதில்லை - 2
    உலகத்தை திரும்பி நான் பார்ப்பதில்லை - (2) - அதிகாலையில்

    2) கன்மலை உச்சியில் ஏறிடுவேன்
    கரங்களை உயர்த்தி நான் ஜெபித்திடுவேன் - 2
    மகிமையின் பிரசன்னம் என்னை மூடுமே -2
    முகமுகமாய் நான் பேசிடுவேன் - (2) - அதிகாலையில்

    3) மறுரூப மலைக்கு சென்றிடுவேன்
    மனம் புதிதாகி வாழ்ந்திடுவேன் - 2
    தேவ தரிசனம் பெற்றிடுவேன் -2
    இறங்கி சென்று சேவை செய்வேன் - (2) - அதிகாலையில்


    Adhi kalaiyil Seenai - அதிகாலையில் சீனாய் Adhi kalaiyil Seenai - அதிகாலையில் சீனாய் Reviewed by Christking on October 08, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.