Eppoluthum Magizhchiya Irungal - எப்பொழுதும் மகிழ்ச்சியாயிருங்கள் - Christking - Lyrics

    Eppoluthum Magizhchiya Irungal - எப்பொழுதும் மகிழ்ச்சியாயிருங்கள்

    Song: Eppoluthum Magizhchiya Irungal
    Singer: Eva. Kala Vincent
    Album: Vaazhvin Geethangal
    Ministries: Jesus Lives Ministries

    எப்பொழுதும் மகிழ்ச்சியாயிருங்கள்
    இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள் - (2)
    என்ன நேர்ந்தாலும் நன்றி என்று சொல்லுங்கள்
    இதுவே உங்களைக் குறித்து அவரின் சித்தமே - தேவ சித்தமே
    - எப்பொழுதும்

    1) கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாய் இருங்கள்
    சந்தோஷமாய் இருங்கள் என்று மறுபடியும் சொல்கிறேன் - (2)
    எதை நினைத்தும் கலங்காமல் தேவனிடம் சொல்லுங்கள் - (2)
    அப்பொழுது உங்களை தேவ சமாதானம் சூழ்ந்து கொள்ளுமே
    - இதயம் நிரப்புமே
    - எப்பொழுதும்

    2) நம்பிக்கையில் எப்பொழுதும் சந்தோஷமாய் இருங்கள்
    துன்ப வேளையில் பொறுமையாய் இருங்கள் - (2)
    அசதியாய் இராமல் ஜாக்கிரதையாய் இருங்கள் - (2)
    ஆவியில் அனலாக ஊழியம் செய்திடுங்கள் - ஜெபத்தில்
    நில்லுங்கள்
    - எப்பொழுதும்

    3) கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் இருப்பது உங்கள் பெலனே
    எது இல்லாமல் போனாலும் கர்த்தர் உங்கள் பெலனே - (2)
    பலத்தால் இடைக்கட்டி வழியை செவ்வைப்படுத்தும் தேவனே
    மான் கால்கள் போலாக்கி உயர்ஸ்தலத்தில் நிறுத்துவார்
    - கவலை வேண்டாமே
    - எப்பொழுதும்


    Eppoluthum Magizhchiya Irungal - எப்பொழுதும் மகிழ்ச்சியாயிருங்கள் Eppoluthum Magizhchiya Irungal - எப்பொழுதும் மகிழ்ச்சியாயிருங்கள் Reviewed by Christking on October 21, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.