Pirayojanam Enna - பிரயோஜனம் என்ன? - Christking - Lyrics

    Pirayojanam Enna - பிரயோஜனம் என்ன?

    Song: Pirayojanam Enna
    Album: Belan 6
    Lyrics, Tune & Sung by: John & Vasanthy
    Music by: Stephen J Renswick

    பிரயோஜனம் என்ன? பிரயோஜனம் என்ன?
    அன்பில்லா வாழ்க்கையில் பிரயோஜனம் என்ன? - (2)

    1) மனுஷர் பாஷை, தூதர் பாஷை பேசினாலும் என்ன?
    மத்தளமாய் கைத்தாளமாய் முழங்கிட்டாலும் என்ன? - (2)
    மலைகளையும் பெயர்த்திடும் விசுவாசத்தினால் என்ன?
    தன்னுடலை சுட்டெரிக்க கொடுத்திட்டாலும் என்ன?
    அன்பில்லா வாழ்க்கையின் அர்த்தமும் தான் என்ன?

    2) தரிசனங்கள் உரைத்திடும் உன் வரத்தினாலும் என்ன?
    இரகசியங்கள் அறிந்திடும் உன் அறிவினாலும் என்ன?
    உண்டான யாவற்றையும் கொடுத்திட்டாலும் என்ன?
    அனுதினமும் அன்னதானம் செய்திட்டாலும் என்ன?
    அன்பில்லா வாழ்க்கையின் அர்த்தமும் தான் என்ன?

    3) சகலத்தையும் தாங்கும் சகலத்தையம் நம்பும்
    சத்தியத்தில் களிகூரும் அன்பில் சாந்தம் உண்டாம்
    தற்பொழிவை நாடாதாம் சினமும் அடையாதாம்
    அன்பு தன்னைப் புகழாதாம் இறுமாப்படையாதாம்
    விசுவாசம் நம்பிக்கையில் பெரிதான தன்பாம்....


    Pirayojanam Enna - பிரயோஜனம் என்ன? Pirayojanam Enna - பிரயோஜனம் என்ன? Reviewed by Christking on October 29, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.