Senaikalin karthar - சேனைகளின் கர்த்தர்

    Senaikalin karthar - சேனைகளின் கர்த்தர்

    Song: Senaikalin karthar
    Sung By: Sis. Kala Vincent
    Album: Vaazhvin Geethangal
    Ministries: Jesus Lives Ministries

    சேனைகளின் கர்த்தர் என்றும் பரிசுத்தர் பரிசுத்தர்
    சேனைகளின் அதிபதியே பரிசுத்தர் - (2)

    1) பூமி நிலை மாறினாலும் மலைகள் விலகினாலும்
    பர்வதங்கள் அதிர்ந்தாலும் கடல்கள் கொந்தழித்தாலும்
    சேனைகளின் கர்த்தர் என்னோடு இருக்கிறீர் (இருக்கிறீர்)
    சேனையோடு எழுந்து யுத்தம் பண்ணுவீர் - (2) சேனைகளின்

    2) இரவின் பயத்துக்கும் பகலின் அம்புக்கும்
    கொடிய கொள்ளை நோய்க்கும் பயப்படேன் பயப்படேன்
    உன்னதத்தின் தேவன் என்னோடு இருக்கிறீர் (இருக்கிறீர்)
    உமது சிறகாலே என்னை மூடுவீர் - (2) சேனைகளின்

    3) என்னருகில் ஆயிரம் வலப்புறம் பதினாயிரம்
    விழுந்தாலும் அணுகாது அணுகவே அணுகாது
    தேவனே என்னோடு நீர் இருக்கிறீர் (இருக்கிறீர்)
    தீமைகள் அணுகாமல் காத்திடுவீர் - (2) சேனைகளின்


    Senaikalin karthar - சேனைகளின் கர்த்தர் Senaikalin karthar - சேனைகளின் கர்த்தர் Reviewed by Christking on October 24, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.