kalangal Kadanthu Ponathae - காலங்கள் கடந்து போனதே - Christking - Lyrics

    kalangal Kadanthu Ponathae - காலங்கள் கடந்து போனதே

    காலங்கள் கடந்து போனதே என் இயேசய்யா
    உம்மைத் தெரிந்து கொள்ளாமல் நேரம் வீணானதே -(2)
    உம்மை அறிந்து கொள்ளாமல் வாழ்வு வீணானதே
    பரலோக ராஜனே பார்போற்றும் தேவனே - (2)
    இனிமேலும் உம்மை விட மாட்டேன் என் இயேசய்யா
    இனிமேலும் உம்மை விட மாட்டேன் - இந்தப் பாவி நான்
    இனிமேலும் உம்மை விட மாட்டேன் - காலங்கள் கடந்து

    1) நான் செய்த பாவங்கள் கொஞ்சமல்லவே
    நான் செய்த துரோகங்கள் கொஞ்சமல்லவே - (2)
    ஒப்புக்கொடுத்தேன் உம்மிடத்திலே
    கண்ணீர் வடித்தேன் நான் உம்மிடத்திலே - (2)
    நீர் சிந்திய இரத்தத்தினால் தூய்மையாகினேன்
    நீர் பட்ட காயத்தினால் குணமாகினேன் - (2)
    மன்னிக்கும் தேவனே நீதி சொல்லும் ராஜனே - (2)
    இனிமேலும் உம்மை விட மாட்டேன் என் இயேசய்யா
    இனிமேலும் உம்மை விட மாட்டேன் - இந்தப் பாவி நான்
    இனிமேலும் உம்மை விட மாட்டேன் - காலங்கள் கடந்து

    2) மன்றாடி ஜெபித்த என்னை ஏற்றுக் கொண்டீரே
    மனதினில் அமைதி தந்து வாழ வைத்தீரே - (2)
    பாலைவனத்தில் நீரூற்றினீர்
    சோலைவனமாய் வந்து வாசம் பண்ணினீர் - (2)
    தந்தையாய் என்னை வந்து தேற்றி விட்டீரே
    சிந்தையல்ல உன் நினைவாய் மாற்றி விட்டீரே - (2)
    சீயோனின் ராஜனை எந்நாளும் பாடுவேன்
    இனிமேலும் உம்மை விட மாட்டேன் என் இயேசய்யா
    இனிமேலும் உம்மை விட மாட்டேன் - இந்தப் பாவி நான்
    இனிமேலும் உம்மை விட மாட்டேன் - காலங்கள் கடந்து

    3) கர்த்தருக்கு மகிமை என்று நம்பி வந்தவரை
    தேவன் வழி நல்லது என்று தேடி வந்தவரை - (2)
    தாழ்ச்சியுடனே ஒப்புக்கொடுத்தால்
    தயவுடனே உம்மை தாழ்பணிந்தால் - (2)
    எந்நாளும் கூட இருந்து காப்பவர் நீரே
    தீராத தாகத்தையும் தீர்ப்பவர் நீரே - (2)
    கானானின் தேசத்தின் அன்பான தேவனே
    இனிமேலும் உம்மை விட மாட்டேன் என் இயேசய்யா
    இனிமேலும் உம்மை விட மாட்டேன் - இந்தப் பாவி நான்
    இனிமேலும் உம்மை விட மாட்டேன் - காலங்கள் கடந்து

    kalangal Kadanthu Ponathae - காலங்கள் கடந்து போனதே kalangal Kadanthu Ponathae - காலங்கள் கடந்து போனதே Reviewed by Christking on October 25, 2018 Rating: 5

    2 comments:

    Powered by Blogger.