Thuthi Gannam - துதி கனம் - Christking - Lyrics

    Thuthi Gannam - துதி கனம்

    Song: Thuthi Gannam
    Album: Messia 5
    Lyric & Tune: NA
    Editing: NA

    பல்லவி

    துதி கனம் செலுத்துகிறோம் திரியேக தேவனுக்கு
    ஆராதனை நாயகரே என்றென்றும் புகழ் (துதி) உமக்கு

    பரிசுத்தரே பரம பிதாவே
    பரலோக ராஜாவே
    இருள் ஏதும் பாவம் ஏதும்
    இல்லாத தூயவரே - துதி கனம்

    பேரறிவும் ஞானமும் நீரே
    ஆலோசனைக் கர்த்தர் நீரே
    யோசனையில் பெரியவரே
    மறைபொருள் உமக்கு இல்லையே - துதிகனம்

    சர்வலோக நீதிபரர் நீர்
    பூமியின் ராஜாவே
    நீதியோடும் நிதானத்தோடும்
    நியாயங்கள் தீஅ
    ர்ப்பவரே - துதிகனம்

    என் உயிராய் இருப்பவர் நீரே
    என் பெலன் சுகம் நீரே
    என் வழியே சத்தியமே
    உம்மாலே வாழ்கின்றேன் - துதிகனம்


    Thuthi Gannam - துதி கனம் Thuthi Gannam - துதி கனம் Reviewed by Christking on October 03, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.