En Uyarndha Kanmalai - என் உயர்ந்த கன்மலையே - Christking - Lyrics

    En Uyarndha Kanmalai - என் உயர்ந்த கன்மலையே

    Album: Thunaiyalarey-3
    Singer: Ps.Reegan Dhanasekar
    Music: A Christiyaan Kutti
    Lyrics: Ps.Reegan Dhanasekar

    என் உயர்ந்த கன்மலையே
    என் கோட்டையும் அரணும் நீரே
    என் மறைவிடமே என் உறைவிடமே
    நான் நம்பும் துணையாளரே - (2)

    ஆராதனை உமக்கே (4) - உயர்ந்த
    1. ஞானக் கன்மலையே தாகம் தீர்ப்பவரே
    கன்மலை வெடிப்பினிலே பாதுகாப்பவரே
    ஜீவ தண்ணீர் எனக்குத் தந்தீர் - 2
    தேற்றரவாளன் நீரே ஆவியானவரே - 2 - ஆராதனை

    2. வார்த்தையானவரே வாழ்வு தருபவரே
    வானிலும் பூமியிலும் வல்லமையுள்ளவரே
    தேனிலும் மதுரம் உந்தன் வசனம் - 2
    என்னைத் தேற்றிடுமே அனலாய் மாற்றிடுமே -2 - ஆராதனை

    3. சருவ வல்லவரே சாவை வென்றவரே
    சருவ சிருஷ்டிகரே சர்வத்தை ஆள்பவரே
    முழங்கால் யாவும் அவர் முன் முடங்கும் -2
    மீண்டும் வருபவரே எங்கள் எஜமானரே - 2 - ஆராதனை


    En Uyarndha Kanmalai - என் உயர்ந்த கன்மலையே En Uyarndha Kanmalai - என் உயர்ந்த கன்மலையே Reviewed by Christking on October 02, 2018 Rating: 5

    1 comment:

    Powered by Blogger.