Yesu Pola Vazhalam - இயேசு போல வாழலாம் - Christking - Lyrics

    Yesu Pola Vazhalam - இயேசு போல வாழலாம்

    SONG: YESU POLA VAZHALAM
    DIRECTION: A.V. PETER ELWIS
    Lyrics, Tune, Composed: Rev. ANTONY RAJ

    இயேசு போல நாமும் கூட வாழலாம்
    மறுஇயேசுவாக நாமும்கூட மாறலாம் - (2)
    அன்பும் இரக்கமும் இதயத்தில் இருந்தால்
    மன்னிப்பை தினமும் பகைவர்க்கு கொடுத்தார் - (2) இயேசு போல

    1) பலியை அல்ல இரக்கத்தையே
    விரும்பிடும் கடவுள் நம் இயேசுவே - (2)
    பாவத்தையே அல்ல பரிவினையே
    காட்டிடும் கடவுள் நம் இயேசுவே
    பாடுகள் சுமந்து பரிபலன் தந்த
    மாபரன் இவர் தானே
    இவரைத் தொடர்வோம்
    நிதமும் தொடர்வோம் - (2) இயேசு போல

    2) உள்ளதை எல்லாம் பகிர்ந்திடவே
    உவமைகள் சொன்னார் நம் இயேசுவே
    இறங்கிடும் மனமே மேன்மையென
    மீட்பினை விதைத்தார் நம் இயேசுவே
    பாசத்தின் மிகுதி பாய்ந்திட
    உயிரைத் தந்தவர் இவர் தானே
    இவரைத் தொடர்வோம்
    நிதமும் தொடர்வோம் - (2) இயேசு போல


    Yesu Pola Vazhalam - இயேசு போல வாழலாம் Yesu Pola Vazhalam - இயேசு போல வாழலாம் Reviewed by Christking on October 10, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.