En Snegame - என் சிநேகமே - Christking - Lyrics

    En Snegame - என் சிநேகமே

    Song: En Snegame
    Lyric,Tune: Bishop Kingsly
    Sung: Pas. Anita Sangeetha Kingsly
    Music: Isaac D

    என் சிநேகமே, என் தேவனே
    என் ராஜனே, என் இயேசுவே - (2)
    அநாதி சிநேகமே, அழைத்த சிநேகமே
    கரம் பிடித்த சிநேகமே, கைவிடா சிநேகமே - (2)

    1) மாபாவி எனக்காய் சிலுவையில் மரித்தீர்
    பரிசுத்தனாக்கிட உம் ஆவி தந்திட்டீர்
    மாறிடா உம் சிநேகம் என்னை சுகமாக்கிற்று
    உம் சேவைக்காய் நான் உயிர் வாழுவேன் - அநாதி சிநேகமே

    2) அநாதி சிநேகத்தால் என்னை அணைத்துக் கொண்டீரே
    உம் கிருபையால் என்னை உயர்த்தி வைத்தீரே
    உம் சித்தம் போல் என்னை வனைந்து கொள்ளுமே
    உமக்காகவே நான் உயிர் வாழுவேன் - என் சிநேகமே


    En Snegame - என் சிநேகமே En Snegame - என் சிநேகமே Reviewed by Christking on November 08, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.