Nalla Naal - நல்ல நாள் :: Chithra - Christking - Lyrics

    Nalla Naal - நல்ல நாள் :: Chithra


    சல் சலா சல் சல சல சல சல் சலா சல்
    சல் சலா சல் பல பல பல புதுமைகள் பெருமைகள்
    இனிமைகள் இறங்கிய நல்ல நாள்
    ஒரு (இது) நல்ல நாள் நம் தேவன் தந்த நாள் - (2)
    வானக மைந்தன் மண்ணகம் வாழ
    அற்புதம் செய்த ஆனந்த நாளே

    1. விழியைப் பார்த்தால் காருண்யம் பூக்கும்
    முகத்தைப் பார்த்தால் எழில் காந்தம் ஈர்க்கும் - (2)
    ஓஓஓஓ செவ்விதழ் புன்னகை பொன்னோவியம்
    குழந்தை இயேசுவின் அன்போவியம்
    இயேசுவின் மகிமை என்றென்றும் இனிமை
    கருணை மலையினில் நனையலாம்
    ஓஓஓஓ செவ்விதழ் புன்னகை பொன்னோவியம்
    குழந்தை இயேசுவின் அன்போவியம்
    இயேசுவின் மகிமை என்றென்றும் இனிமை
    மழலை வடிவினில் வானம் பூமியும்
    கொஞ்சும் (நம்) இயேசுவின் நாளல்லலோ - (2) - சல் சலா சல்

    2. மெழுகைப் போலே நாம் வாழ வேண்டும்
    பாரம் தாங்கும் இளைப்பாற வேண்டும் - (2)
    ஓஓஓ தேவ வசனமே நம் ஆகமம்
    மேசியா ஒருவரே நம் மீட்பராம்
    அருளை நினைந்து அகிலம் பணிந்தால்
    வாழ்வின் மகத்துவம் காணலாம்
    ஓஓஓ தேவ வசனமே நம் ஆகமம்
    மேசியா ஒருவரே நம் மீட்பராம்
    அருளை நினைந்து அகிலம் பணிந்தால்
    குழந்தை அழகினைப் பார்த்தால் பேரருள்
    இன்பம் நம் இயேசுவின் நாளல்லோ - (2) - சல் சலா சல்


    Tamil Christmas Song
    Nalla Naal - நல்ல நாள் :: Chithra Nalla Naal - நல்ல நாள் :: Chithra Reviewed by Christking on November 30, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.