Sollum Sollum Enakku - சொல்லும் சொல்லும் எனக்கு Song From Album : Belan Vol 5 - Christking - Lyrics

    Sollum Sollum Enakku - சொல்லும் சொல்லும் எனக்கு Song From Album : Belan Vol 5

    Song: Sollum Sollum Enakku
    Album: Belan 5
    Lyrics, Tune & Sung by: John & Vasanthy
    Music: Gem Gabriel

    சொல்லும் சொல்லும் சொல்லும்
    எனக்கு ஆலோசனை சொல்லும் - (2)
    எந்த பக்கம் வலையை வீச
    சொல்லும் சொல்லும் சொல்லும்
    எனக்கு ஆலோசனை சொல்லும் - (2)

    1) இராவெல்லாம் வலை வீசி சோர்ந்து போயி நின்னேனே
    மீன் ஒன்னும் கிடைக்காம வெறுங்கையா வந்தேனே - (2)
    சொல்லும் சொல்லும் சொல்லும் எனக்கு ஆலோசனை சொல்லும்
    எந்த பக்கம் வலையை வீச, எனக்கு ஆலோசனை சொல்லும்

    2) ஊரெல்லாம் பஞ்சமாச்சு எகிப்துக்கு நான் ஓடட்டுமா,
    ஒரு பிடி விதை போட்டா நூறு மடங்கு தருவீரா? - (2)
    சொல்லும் சொல்லும் சொல்லும் எனக்கு ஆலோசனை சொல்லும்
    எந்த இடத்தில் தங்கிட நான், எனக்கு ஆலோசனை சொல்லும்

    3) ஏறெடுத்துப் பார்க்கையிலே அழகாகத் தோணுதய்யா
    சோதோமும் கொமோராவும் இருப்பது எனக்குத் தெரியலையே- (2)
    சொல்லும் சொல்லும் சொல்லும் எனக்கு ஆலோசனை சொல்லும்
    எந்த பக்கம் நடையக் கட்ட, எனக்கு ஆலோசனை சொல்லும்


    Sollum Sollum Enakku - சொல்லும் சொல்லும் எனக்கு Song From Album : Belan Vol 5 Sollum Sollum Enakku - சொல்லும் சொல்லும் எனக்கு Song From Album : Belan Vol 5 Reviewed by Christking on October 15, 2018 Rating: 5

    No comments:

    Powered by Blogger.