Thanthen Ennai Yesuvae - தந்தேன் என்னை இயேசுவே :- Hema John - Christking - Lyrics

    Thanthen Ennai Yesuvae - தந்தேன் என்னை இயேசுவே :- Hema John


    தந்தேன் என்னை இயேசுவே (கீர்த்தனை 187)

    பல்லவி
    தந்தேன் என்னை இயேசுவே ,
    இந்த நேரமே உமக்கே

    அனுபல்லவி
    உந்தனுக்கே ஊழியஞ் செய்யத்
    தந்தேன் என்னைத் தாங்கியருளும்-

    சரணங்கள்

    ஜீவ் கால்ம் முழுதும்
    தேவபணி செய்திடுவேன்.
    பூவில் கடும் போர்புரிகையில்
    காவும் உந்தன் கரத்தினில் வைத்து

    உலகோர் என்னை நெருக்கிப
    பலமாய் யுத்த்ம் செய்திடினும் ,
    நலமாய் சர்வ ஆயுதம் பூண்டு
    நானிலத்தில் நாதா வெல்லுவேன் .-

    கஷ்ட நஷ்டம் வந்தாலும்
    துஷ்டர் கூடிச் சூழ்ந்திட்டாலும்
    அஷ்டதிக்கும் ஆளும் தேவனே
    அடியேன் உம்மில் அமரச் செய்திடும் .-

    உந்தஞ் சித்தமே செய்வேன்
    எந்தன் சித்தம் ஒழித்திடுவேன் .
    எந்த இடம் எனக்குக் காட்டினும்
    இயேசுவே அங்கே இதோ போகிறேன் .-

    ஒன்றுமில்லை நான் ஐயா!
    உம்மலான்றி ஒன்றும் செய்யேன் .-
    அன்று சிஷர்க் களித்த ஆவியால்
    இன்றே அடியேனை நிரப்பும் .


    Thanthen Ennai Yesuvae - தந்தேன் என்னை இயேசுவே :- Hema John Thanthen Ennai Yesuvae - தந்தேன் என்னை இயேசுவே :- Hema John Reviewed by Christking on June 09, 2019 Rating: 5

    No comments:

    Powered by Blogger.