Thayana Thagapan - தாயான தகப்பனாய் :- Pr. David Charles - Christking - Lyrics

    Thayana Thagapan - தாயான தகப்பனாய் :- Pr. David Charles



    தாயான தகப்பனாய்
    தாங்கி என்னை ஏந்தி
    சுமந்து வந்தீரே
    உம் அன்பு கரம் நீட்டி
    அள்ளி அணைத்தென்னை
    தூக்கி சுமந்தீரே

    உம் அன்பை மறவேன்
    உமக்காய் வாழ்வேன்
    என் தாயான தகப்பன் நீரே
    என்னை தாங்கியே சுமந்தீரே

    1.தடுமாறும் போது தாங்கி கொண்டீரே
    என் தவிப்புகளில் என்னை தேற்றினீரே
    பெலவீனத்தில் என் பெலனாய் வந்தீர்
    என் தேவைகளின் தேடல் நீரே-உம் அன்பை

    2.தாய் உன்னை மறந்தாலும் மறவேன் என்றீரே
    உம் உள்ளங்கையில் என்னை பொறித்தவரே
    இராப்பகலாய் கண்ணுறங்காமல்
    கண்மணிபோல் என்னை காத்தவரே-உம் அன்பை


    English


    Thayana Thagapan - தாயான தகப்பனாய் :- Pr. David Charles Thayana Thagapan - தாயான தகப்பனாய் :- Pr. David Charles Reviewed by Christking on March 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.