Thooyavare - தூயவரே :- Pr. Vincent Churchill - Christking - Lyrics

Thooyavare - தூயவரே :- Pr. Vincent Churchill



தூயவரே துணையானீரே
துதிகன மகிமை உமக்கே
பரிசுத்தரே பரிகாரியே
பரலோக இராஜா நீரே (2)

உமக்கே எங்கள் ஆராதனை
உமக்கே ஆராதனை (4)

1.உன்னதமானவரே
உயர்ந்த அடைக்கலமே (2)
உறவாய் வந்தீர் உயிரை தந்தீர்
உண்மையான தேவனே (2)

உமக்கே எங்கள் ஆராதனை
உமக்கே ஆராதனை (4)

2.நிலையற்ற உலகத்திலே
நிரந்தர ஆதாரமே (2)
நினைவுகள் அறிந்தீர் நிறைவை தந்தீர்
நித்திய இராஜனே (2)

உமக்கே எங்கள் ஆராதனை
உமக்கே ஆராதனை (4)

3.தடுமாறும் நேரத்திலே
தாங்கி பிடிப்பவரே (2)
தாயின் கருவில் என்னைக் கண்டீர்
கைவிடா தகப்பனே (2)

உமக்கே எங்கள் ஆராதனை
உமக்கே ஆராதனை (4)


English


Thooyavare - தூயவரே :- Pr. Vincent Churchill Thooyavare - தூயவரே :- Pr. Vincent Churchill Reviewed by Christking on March 17, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.