Bethalegam Oororam Sathirathai - பெத்லேகம் ஊரோரம் சத்திரத்தை - Christking - Lyrics

    Bethalegam Oororam Sathirathai - பெத்லேகம் ஊரோரம் சத்திரத்தை


    1. Pethlaekam Oororam Saththiraththai Naatik
    Karththan Yesu Paalanukkuth Thuththiyangal Paatip
    Pakthiyudan Iththinam Vaaotip
    — Bethlaekam

    2. Ellaiyillaa Njaanaparan Vellaimalaiyoram
    Pullannaiyilae Piranthaar Illamengum Eeram
    Thollaimikum Avviruttu Naeram
    — Bethlaekam

    3. Vaan Puvi Vaal Raajanukku Maattakanthaan Veetoo
    Vaanavarkku Vaayththa Meththai Vaatina Pul Pootoo
    Aana Palang Kanthai Enna Paatoo?
    — Bethlaekam

    4. Antharaththil Paadukintar Thoothar Senai Kooti
    Manthai Aayar Odukintar Paadal Kaetkath Thaeti
    Intiravil Enna Intha Moti
    — Bethlaekam

    5. Aattitaiyar Anjukiraar Avar Makimai Kanndu
    Attiyintik Kaapiriyael Sonna Seythi Kenndu
    Naattamudan Ratchakaraik Kanndu
    — Bethlaekam


    1. பெத்லேகம் ஊரோரம் சத்திரத்தை நாடிக்
    கர்த்தன் இயேசு பாலனுக்குத் துத்தியங்கள் பாடிப்
    பக்தியுடன் இத்தினம் வாஓடிப்
    — பெத்லேகம்

    2. எல்லையில்லா ஞானபரன் வெல்லைமலையோரம்
    புல்லணையிலே பிறந்தார் இல்லமெங்கும் ஈரம்
    தொல்லைமிகும் அவ்விருட்டு நேரம்
    — பெத்லேகம்

    3. வான் புவி வாழ் ராஜனுக்கு மாட்டகந்தான் வீடோ
    வானவர்க்கு வாய்த்த மெத்தை வாடின புள் பூடோ
    ஆன பழங் கந்தை என்ன பாடோ?
    — பெத்லேகம்

    4. அந்தரத்தில் பாடுகின்றார் தூதர் சேனை கூடி
    மந்தை ஆயர் ஓடுகின்றார் பாடல் கேட்கத் தேடி
    இன்றிரவில் என்ன இந்த மோடி
    — பெத்லேகம்

    5. ஆட்டிடையர் அஞ்சுகிறார் அவர் மகிமை கண்டு
    அட்டியின்றிக் காபிரியேல் சொன்ன செய்தி கொண்டு
    நாட்டமுடன் ரட்சகரைக் கண்டு — பெத்லேகம்

    Bethalegam Oororam Sathirathai - பெத்லேகம் ஊரோரம் சத்திரத்தை Bethalegam Oororam Sathirathai - பெத்லேகம் ஊரோரம் சத்திரத்தை Reviewed by Christking on June 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.