Boomiyin Kudigale Neer - பூமியின் குடிகளே நீர் - Christking - Lyrics

    Boomiyin Kudigale Neer - பூமியின் குடிகளே நீர்


    பூமியின் குடிகளே நீர் தாமதமிலாதியேசு
    சாமியினன்னாமமதிலே மகிழுவீர்

    ஓமனாதி யந்தபரனே மனுடரான நம்மை
    உருக்கமாய்த் – தங்கருணைப்
    பெருக்கமாய் – மீட்டரணாந்
    துருக்கமாய் – இதுவரைக்கும்
    நெருக்கமாய் – ஊக்கமாய் நின்றார்

    தந்தையார் தமதுநேச மைந்தனைப் பாதகர்க்காகத்
    தந்துமா நிர்ப்பந்தமற விந்தையாகவே
    இந்த நீசமான பூலோகந்தனை மீட்ட நேசத்தைச்
    சிந்தையில் நினைந்து முழு நன்றியாகவே
    சந்ததமுமே துதிப்ப தந்தமான வேலையல்லோ
    தாசரே – யேசுநாதர்
    நேசரே – எருசலேம்
    வாசரே – கர்த்தருக்குள்ளாம்
    ராசரே – ஆசாரிமாரே

    கர்த்தனார் ஒருவரே நம் நித்திய பரமனென்ற
    சத்தியத்தை எத்தினமும் உற்றுணருவீர்
    அத்தனார் படைப்புகளைப் புத்தியற்றுத் தெய்மெனச்
    சொற்றவரே விக்கரகப் பத்தியகல்வீர்
    இத்தரையில் நாங்களல்ல உத்தபரன் எங்களைக் கண்
    ணோக்கினார் – எங்களபவம்
    போக்கினார் – சகலதுன்பம்
    நீக்கினார் – தமதுமந்தை
    ஆக்கினார் – தூக்கினாரென்று

    ஜீவபரன் வாசல்களில் மேவி எய்துவோம் துதியோ
    டாவியுடனே நமது நாவுமிசைந்து
    தேவ பிரகாரங்களிலே வருவோமே புகழ்ச்சி
    மாவுரிமை யோடுரைத்துக் கூவி மகிழ்ந்து
    பாவலர் மற்றோரே நல்ல நாவலரே கர்த்தர் வீட்டுக்
    கோடுவோம் – அவர் நாமத்தில்
    கூடுவோம் – அவர் பதத்தை
    நாடுவோம் – அவர் மகிமை
    தேடுவோம் – பாடுவோம் துதி

    வல்ல பரனானவர் மா நல்லவர் அவர் கிருபை
    உள்ள தூழி ஊழிகாலம் தொல்லையுண்டுமோ
    சொல்லரும் அவரதுண்மை யுள்ளதே தலைமுறைகள்
    எல்லாவற்றிலு மெங்களுக்கல்லலண்டுமோ
    புல்லனாம் பேயினரசே யில்லையெனுமட்டும் காளம்
    பிடிக்கிறோம் – சத்தியத்தைப்
    பிடிக்கிறோம் – பேயரங்கம்
    இடிக்கிறோம் – அவனையெங்கும்
    அடிக்கிறோம் – சீக்கிரம் ஜெயம்


    Poomiyin Kutikalae Neer Thaamathamilaathiyaesu
    Saamiyinannaamamathilae Makiluveer

    Omanaathi Yanthaparanae Manudaraana Nammai
    Urukkamaayth – Thangarunnaip
    Perukkamaay – Meettarannaan
    Thurukkamaay – Ithuvaraikkum
    Nerukkamaay – Ookkamaay Nintar

    Thanthaiyaar Thamathunaesa Mainthanaip Paathakarkkaakath
    Thanthumaa Nirppanthamara Vinthaiyaakavae
    Intha Neesamaana Poolokanthanai Meetta Naesaththaich
    Sinthaiyil Ninainthu Mulu Nantiyaakavae
    Santhathamumae Thuthippa Thanthamaana Vaelaiyallo
    Thaasarae – Yaesunaathar
    Naesarae – Erusalaem
    Vaasarae – Karththarukkullaam
    Raasarae – Aasaarimaarae

    Karththanaar Oruvarae Nam Niththiya Paramanenta
    Saththiyaththai Eththinamum Uttunaruveer
    Aththanaar Pataippukalaip Puththiyattuth Theymenach
    Sottavarae Vikkarakap Paththiyakalveer
    Iththaraiyil Naangalalla Uththaparan Engalaik Kann
    Nnokkinaar – Engalapavam
    Pokkinaar – Sakalathunpam
    Neekkinaar – Thamathumanthai
    Aakkinaar – Thookkinaarentu

    Jeevaparan Vaasalkalil Maevi Eythuvom Thuthiyo
    Daaviyudanae Namathu Naavumisainthu
    Thaeva Pirakaarangalilae Varuvomae Pukalchchi
    Maavurimai Yoduraiththuk Koovi Makilnthu
    Paavalar Mattaோrae Nalla Naavalarae Karththar Veettuk
    Koduvom – Avar Naamaththil
    Kooduvom – Avar Pathaththai
    Naaduvom – Avar Makimai
    Thaeduvom – Paaduvom Thuthi

    Valla Paranaanavar Maa Nallavar Avar Kirupai
    Ulla Thooli Oolikaalam Thollaiyunndumo
    Sollarum Avarathunnmai Yullathae Thalaimuraikal
    Ellaavattilu Mengalukkallalanndumo
    Pullanaam Paeyinarase Yillaiyenumattum Kaalam
    Pitikkirom – Saththiyaththaip
    Pitikkirom – Paeyarangam
    Itikkirom – Avanaiyengum
    Atikkirom – Seekkiram Jeyam

    Boomiyin Kudigale Neer - பூமியின் குடிகளே நீர் Boomiyin Kudigale Neer - பூமியின் குடிகளே நீர் Reviewed by Christking on June 24, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.