Deva Devane Yesu Rajane - தேவ தேவனே இயேசு ராஜனே - Christking - Lyrics

    Deva Devane Yesu Rajane - தேவ தேவனே இயேசு ராஜனே


    தேவ தேவனே இயேசு ராஜனே
    உம்மைக் காணும் இருதயம் மகிழும்
    எனது எஜமானரே என்
    மனதின் மணவாளரே

    என் இதய சிங்காசனத்தினிலே
    வீற்றிருக்கும் என் ராஜாவே
    வானாதி வானங்கள் உமக்கிருக்க
    இந்த இதயம் தான் உம் வீடானதோ
    என்னில் நீர் வாழ்ந்திட
    என்ன நான் செய்தேனோ

    நான் உம்மை மறந்து பிரிந்திட்ட போதும்
    நினைத்து நினைத்து ஏங்கினீரே
    நான் உம்மை வெறுத்து ஓடின போதும்
    நீர் என்னை உயிராய் நேசித்தீரே
    இது தான் இயேசுவே அநாதி சிநேகமோ

    நான் என்னை உயிராய் நேசிப்பதைவிட
    நீர் என்னை அதிகமாய் நேசிக்கின்றீரே
    பாவியில் நான் பெரும்பாவியாய் வாழ்ந்தும்
    பாசமாய் உயிரையே கொடுத்தீரே
    இது தான் இயேசுவே அன்பின் எல்லையோ


    Thaeva Thaevanae Yesu Raajanae
    Ummaik Kaanum Iruthayam Makilum
    Enathu Ejamaanarae en
    Manathin Manavaalarae

    En Ithaya Singaasanaththinilae
    Veettirukkum en Raajaavae
    Vaanaathi Vaanangal Umakkirukka
    Intha Ithayam Thaan Um Veedaanatho
    Ennil Neer Vaalnthida
    Enna Naan Seythaeno

    Naan Ummai Maranthu Pirinthitta Pothum
    Ninaiththu Ninaiththu Aengineerae
    Naan Ummai Veruththu Otina Pothum
    Neer Ennai Uyiraay Naesiththeerae
    Ithu Thaan Yesuvae Anaathi Sinaekamo

    Naan Ennai Uyiraay Naesippathaivida
    Neer Ennai Athikamaay Naesikkinteerae
    Paaviyil Naan Perumpaaviyaay Vaalnthum
    Paasamaay Uyiraiyae Koduththeerae
    Ithu Thaan Yesuvae Anpin Ellaiyo

    Deva Devane Yesu Rajane - தேவ தேவனே இயேசு ராஜனே Deva Devane Yesu Rajane - தேவ தேவனே இயேசு ராஜனே Reviewed by Christking on June 27, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.