Deva Saayal Aaga Mari - தேவ சாயல் ஆக மாறி - Christking - Lyrics

    Deva Saayal Aaga Mari - தேவ சாயல் ஆக மாறி


    தேவ சாயல் ஆக மாறி
    தேவனோடிருப்பேன் நானும்

    1. அந்த நாளும் நெருங்கிடுதே
    அதி விரைவாய் நிறைவேறுதே
    மண்ணின் சாயலை நான் களைந்தே தம்
    விண்ணவர் சாயல் அடைவேன்
    – தேவ சாயல்

    2. பூமியின் கூடாரம் என்றும்
    பெலவீனமே அழிந்திடுமே
    கைவேலை யல்லாத பொன் வீடு
    கண்டடைந்து வாழ்ந்திடுவேன்
    – தேவ சாயல்

    3. சோரும் உள்ளான மனிதன்
    சோதனையில் பெலமடைய
    ஆற்றித் தேற்றிடும் தேற்றரவாளன்
    ஆண்டவர் என்னோடிருப்பார்
    – தேவ சாயல்

    4. ஆவியின் அச்சாரமீந்தார்
    ஆயத்தமாய் சேர்ந்திடவே
    ஜீவனே எனது கிறிஸ்தேசு
    சாவு எந்தன் ஆதாயமே
    – தேவ சாயல்

    5. காத்திருந்து ஜெபிப்பதினால்
    கழுகுபோல பறந்தெழும்பி
    ஜீவயாத்திரை ஓடி முடித்து
    ஜீவ கிரீடம் பெற்றிடுவேன்
    – தேவ சாயல்

    6. மூன்றில் ஒன்றாய் ஜொலிப்பவரை
    முகமுகமாய் தரிசித்திட
    வாஞ்சையாய்த் தவிக்கும் எனதுள்ளம்
    வாரும் என்று கூப்பிடுதே
    – தேவ சாயல்

    7. உன்னத சீயோன் மலைமேல்
    எனதருமை இயேசுவுடன்
    ஜெப வீட்டினிலே மகிழ்ந்தே நான்
    ஜீவீப்பேனே நீடுழியாய்
    – தேவ சாயல்


    Thaeva Saayal Aaka Maari
    Thaevanotiruppaen Naanum

    1. Antha Naalum Nerungiduthae
    Athi Viraivaay Niraivaeruthae
    Mannnnin Saayalai Naan Kalainthae Tham
    Vinnnavar Saayal Ataivaen
    - Thaeva Saayal

    2. Poomiyin Koodaaram Entum
    Pelaveenamae Alinthidumae
    Kaivaelai Yallaatha Pon Veedu
    Kanndatainthu Vaalnthiduvaen
    - Thaeva Saayal

    3. Sorum Ullaana Manithan
    Sothanaiyil Pelamataiya
    Aattith Thaettidum Thaettaravaalan
    Aanndavar Ennotiruppaar
    - Thaeva Saayal

    4. Aaviyin Achchaாrameenthaar
    Aayaththamaay Sernthidavae
    Jeevanae Enathu Kiristhaesu
    Saavu Enthan Aathaayamae
    - Thaeva Saayal

    5. Kaaththirunthu Jepippathinaal
    Kalukupola Paranthelumpi
    Jeevayaaththirai Oti Mutiththu
    Jeeva Kireedam Pettiduvaen
    - Thaeva Saayal

    6. Moontil Ontay Jolippavarai
    Mukamukamaay Tharisiththida
    Vaanjaiyaayth Thavikkum Enathullam
    Vaarum Entu Kooppiduthae
    - Thaeva Saayal

    7. Unnatha Seeyon Malaimael
    Enatharumai Yesuvudan
    Jepa Veettinilae Makilnthae Naan
    Jeeveeppaenae Needuliyaay
    - Thaeva Saayal

    Deva Saayal Aaga Mari - தேவ சாயல் ஆக மாறி Deva Saayal Aaga Mari - தேவ சாயல் ஆக மாறி Reviewed by Christking on June 28, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.