Deva Prasannam Tharume - தேவா பிரசன்னம் தாருமே - Christking - Lyrics

    Deva Prasannam Tharume - தேவா பிரசன்னம் தாருமே


    தேவா பிரசன்னம் தாருமே
    தேடி உம்பாதம் தொழுகிறோம்

    இயேசுவே உம் திவ்விய நாமத்திலே
    இன்பமுடன் கூடி வந்தோமே

    வானம் உமது சிங்காசனம்
    பூமி உமது பாதஸ்தலம்
    பணிந்து குனிந்து தொழுகிறோம்
    கனிந்தெம்மை கண்பாருமே

    சாரோனின் ரோஜா லீலி புஷ்பம்
    சாந்த சொரூபி என் இயேசுவே
    ஆயிரம் பேரிலும் சிறந்தோராம்
    ஆண்டவரைத் தொழுகிறோம்

    கர்த்தர் செய்த உபகாரங்கள்
    கணக்குரைத்து எண்ணலாகுமோ
    இரட்சிப்பின் பாத்திரம் கையில் ஏந்தி
    இரட்சகரைத் தொழுகிறோம்

    கர்த்தர் சமூகம் ஆனந்தமே
    பக்தர் சபையில் பேரின்பமே
    கர்த்தர் நாமத்தைக் கொண்டாடுகிறோம்
    சுத்தர்கள் போற்றும் தேவனே

    நூற்றிருபது பேர் நடுவே
    தேற்றரவாளனே வந்தீரே
    உன்னத ஆவியே ஊற்றிடுமே
    மன்னவனே இந்நேரமே

    எப்போ வருவீர் என் இயேசுவே
    ஏங்கி உள்ளம் உம்மைத் தேடுதே
    பறந்து விரைந்து தீவீரமே
    இறங்கி வாரும் இயேசுவே


    Thaevaa Pirasannam Thaarumae
    Thaeti Umpaatham Tholukirom

    Yesuvae Um Thivviya Naamaththilae
    Inpamudan Kooti Vanthomae

    Vaanam Umathu Singaasanam
    Poomi Umathu Paathasthalam
    Panninthu Kuninthu Tholukirom
    Kaninthemmai Kannpaarumae

    Saaronin Rojaa Leeli Pushpam
    Saantha Soroopi en Yesuvae
    Aayiram Paerilum Siranthoraam
    Aanndavaraith Tholukirom

    Karththar Seytha Upakaarangal
    Kanakkuraiththu Ennnalaakumo
    Iratchippin Paaththiram Kaiyil Aenthi
    Iratchakaraith Tholukirom

    Karththar Samookam Aananthamae
    Pakthar Sapaiyil Paerinpamae
    Karththar Naamaththaik Konndaadukirom
    Suththarkal Pottum Thaevanae

    Noottirupathu Paer Naduvae
    Thaettaravaalanae Vantheerae
    Unnatha Aaviyae Oottidumae
    Mannavanae Innaeramae

    Eppo Varuveer en Yesuvae
    Aengi Ullam Ummaith Thaeduthae
    Paranthu Virainthu Theeveeramae
    Irangi Vaarum Yesuvae

    Deva Prasannam Tharume - தேவா பிரசன்னம் தாருமே Deva Prasannam Tharume - தேவா பிரசன்னம் தாருமே Reviewed by Christking on June 28, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.