Devan Nam Adaikalame - தேவன் நம் அடைக்கலமும் - Christking - Lyrics

    Devan Nam Adaikalame - தேவன் நம் அடைக்கலமும்


    தேவன் நம் அடைக்கலமும் பெலனும்
    ஆபத்துக் காலத்திலே
    அனுகூலம் துணையே

    பர்வதம் அதிர்ந்தாலும்
    இந்த பூமி நிலை மாறினாலும்
    ஜலங்கள் பொங்கி மலை அதிர்ந்தும்
    பயப்படோம் நாமே

    ஓடும் ஓர் நதியுண்டே
    அதின் நடுவில் நம் தேவனுண்டே
    பொங்கும் சந்தோஷம் எங்கும்
    நிரம்பும் தேவன் அதின் சகாயர்

    ஜாதிகள் ராஜ்ஜியங்கள்
    மிக வேகம் கொந்தளிக்கின்றதே
    சேனையின் கர்த்தர் நம்மோடிருக்க
    தேவன் நம் அடைக்கலமே

    பூமியின் பாழ்க்கடிப்பை
    பாரும் கர்த்தர் நடப்பிக்கின்றாரே
    யுத்தம் நிறுத்தி வில்லை ஒடித்தார்
    கர்த்தரின் செயலிதுவே

    அமர்ந்திருந்து நானே – தேவன்
    என்று அறிவீர் என்றாரே
    ஜாதிகட்குள்ளே பூமியின் மேலே
    கர்த்தர் உயர்ந்திருப்பார்


    Devan Nam Ataikkalamum Pelanum
    Aapaththuk Kaalaththilae
    Anukoolam Thunnaiyae

    Parvatham Athirnthaalum
    Intha Poomi Nilai Maarinaalum
    Jalangal Pongi Malai Athirnthum
    Payappatoom Naamae

    Odum or Nathiyunntae
    Athin Naduvil Nam Thaevanunntae
    Pongum Santhosham Engum
    Nirampum Thaevan Athin Sakaayar

    Jaathikal Raajjiyangal
    Mika Vaekam Konthalikkintathae
    Senaiyin Karththar Nammotirukka
    Thaevan Nam Ataikkalamae

    Poomiyin Paalkkatippai
    Paarum Karththar Nadappikkintarae
    Yuththam Niruththi Villai Otiththaar
    Karththarin Seyalithuvae

    Amarnthirunthu Naanae – Thaevan
    Entu Ariveer Entarae
    Jaathikatkullae Poomiyin Maelae
    Karththar Uyarnthiruppaar

    Devan Nam Adaikalame - தேவன் நம் அடைக்கலமும் Devan Nam Adaikalame - தேவன் நம் அடைக்கலமும் Reviewed by Christking on June 29, 2020 Rating: 5

    No comments:

    Powered by Blogger.